பிஷப் இவானுக்கு பொன்விழாவா?

Bishopபிஷப் இவான் அம்புரோஸ் 23.12.1967ல் குருப்பட்டம் பெற்றிருக்கிறார். இது 50வது ஆண்டு. இந்த சரித்திர புகழ்பெற்ற நாயகனின் பொன்விழாவை ஏற்கனவே நமது மறைமாவட்டத்திலும் பாண்டிச்சேரியிலும் கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கூட குருப்பட்டம் கொடுத்து திருச்சபையை கெடுத்துள்ளார்களே என்று மறைமாவட்டம் புலம்பிக்கொண்டிருக்கும் இவேளையில் பிஷப் இவானுக்கு மீண்டும் பெரிய அளவில் பொன்விழா ஆசை வந்துள்ளது. இந்த ஆசையை பிஷப் இவான், பாதிரியார்கள் கிருபாகரன், சகாய ஜோசப் மற்றும் நார்பட் ஆகியோரிடம்  வெளிப்படுத்தியுள்ளார் போலும். பிஷப் இவானின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று அப்பணியையே தலைமேல் சுமந்து இப்போது ஊர் ஊராக சென்று பாதிரியார்களையும் மக்களையும் தயார் செய்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் இம்மறைமாவட்டத்தில் இருந்து மறைமாவட்டத்தையே நாசம் செய்து குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஊழல்களையும் வழக்குகளையும் சொத்தாக குவித்துள்ள இந்த பிஷப் இவான் அம்புரோஸை விரட்டியடிப்பதற்குப்பதில் இன்னும்  பாதிரியார்கள் வால் பிடித்துக் கொண்டு அலைவது வேடிக்கையாக உள்ளது. இன்னும் இவரால் ஏதாவது நன்மை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சில பாதிரியார்கள் தங்கள் கடமைகளை மறந்து முழுமூச்சுடன் செயல்படுவது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. மொத்தத்தில் தூத்துக்குடி  மறைமாவட்டத்தில் வேடிக்கையே வாடிக்கையாக மாறிவிட்டது.  மனந்திருப்புதல், புற மதத்திலிருந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு மாறுதல் என்பவை குதிரைக்கொம்பாக ஆகிவிட்டது. இவர் வந்த பிறகு பக்தியும் கிறித்தவமும் பறந்துவிட்டன. ஆண்டவர் ஏசு கிறிஸ்து எளிய மனத்தவரைத்தான் பேறுபெற்றவர் என்கிறார். பிஷப் இவான் எளிய மனத்தவரா? அல்லது சாந்தமுள்ளவரா? அல்லது நீதிக்காக பாடுபடுபவரா? தவறு செய்துவிட்டு பிறகு அதை நியாயப்படுத்தவும் அதற்காக வழக்குகள் தொடர்வதும் வக்கீல்கள் பின்னால் அலைவதுமே இவருக்கு வேலை ஆகிவிட்டது. இவருடைய காலத்தையும் நேரத்தையும் பொய் சொல்லுவதிலும் சட்டவிரோதங்கள் செய்வதிலுமே கழித்து விட்டார்.

இவ்விழா எடுக்க சொன்னதே இவர்தான் என்று பேசப்படுகிறது. இவ்விழாவிற்கு அனைத்து குருக்களும் கன்னியர்களும் விசுவாசிகளும் வரவேண்டுமாம். இவ்விழா நிகழ்வுகளையும் போலிப்புகழ் மாலைகளையும் கூட்டத்தையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மேதகு கர்தினால் மற்றும் மற்றும் வத்திக்கான் அலுவலகத்திற்கு அனுப்பினால் பிஷப் இவான் நல்லவர் வல்லவர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்களாம். இவர் செய்த அட்டுழியங்கள் அநீதிகள் சட்டவிரோதங்கள் அடாவடித்தனங்கள் அனைத்தும் இந்த விழா மூலம் மறையுமாம். ஒருசில நல்லவர்கள் இவரைப்பற்றி மேதகு கர்தினால் மற்றும் வத்திக்கானுக்கு எழுதியது உண்மையல்ல என்று நிரூபித்துக் காட்ட வேண்டுமாம். மறைமாவட்டமே இவருக்குப் பின்னால் இருக்கிறது என்றும் இவரை புகழ்கிறார்கள் என்றும் இவரை நேசிக்கிறார்கள் என்றும் பாப்பானவருக்கும் பிறருக்கும் தெரியப்படுத்தவேண்டுமாம். தான் ஒரு உத்தமன் என்று நிரூபிக்க வேண்டுமாம். இப்படி பலவாறு பேசப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் உண்மை என தோணுகிறது.

இவர் நல்லவர் என்றால் இந்த மாதிரி விழா எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பார். ஆனால் ஒரு திட்டத்தோடு ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் இவ்விழாவினை யார் தடுப்பது?  80 வயது ஆகும் வரை நான்தான் தூத்துக்குடி பிஷப் என்று இவர் சொல்லிக்கொண்டு திரிகிறாராம். ஒருவேளை அதற்காகத்தான் இவ்விழாவோ? யாருக்குத் தெரியும்?. கால்வருடிகளுக்கும் தூபம் போடுபவர்களுக்கும்தான் உண்மை தெரியும். இவரை நல்லவர் என்று சொல்பவர்களை நாம் எந்த லிஸ்டில் வைப்பது. உன் நண்பன் யாரெனச் சொல் நான் உன்னை யாரெனச் சொல்கிறேன் என்ற வாக்கியம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. புனித மதர் தெரசாவுக்கு விழா எடுக்கவில்லையே!!! இறந்த பிறகு அல்லவா விழா எடுக்கிறார்கள்!!

Corporate ManagerPromotion orderEsacki letterஇவ்விழா அர்த்தமற்ற கிறிஸ்தவ வாழ்விற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும். மேலும் இவ்விழாவினை எடுக்கும் பாதிரியார்களையோ அல்லது ஆசிரியர்களையோ இவர் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் பிஷப் இவான் தனது மேனேஜர் ஆஃப் ஆர்.சி ஸ்கூல்ஸ், தூத்துக்குடி மறைமாவட்டம் என்ற பதவியினை மாற்றி கார்பரேட் மேனேஜர் ஆர்.சி பள்ளிகள் தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்று மாற்றியிருக்கிறார். இதை இசக்கியை தவிர எந்த பாதிரியாருக்காவது, தலைமை ஆசிரியருக்காவது, ஆசிரியருக்காவது  அப்பிஷியலாக தெரியப்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை. இதுதான் அராஜகம் என்பது. சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி செயல்படுகிறார். இதை ஏன் மாற்றினார் என்பதுதான் ரகசியம். லட்டர் பேடு மாற்றப்பட்டுள்ளது என்ற விவரம் எத்தனை பாதிரியார்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும்? எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஆர்டர்கள், சுற்றறிக்கைகளை பார்த்தால் வித்தியாசம் தெரியும். இவர் கார்பரேட் மேனேஜராக ஆகியிருப்பது பாதிரியார்களுக்கும் பள்ளிகளுக்கும்தான் தெரியாது என்று நினைக்காதீர்கள். கல்வித்துறைக்கும் தெரியாது. இது ஒரு உதாரணம்தான். எத்தனை பொய்கள் சொல்லி வருகிறார் என்பது ஆவே மரியாவுக்கு தெரியும். இவரது பொய்களுக்கு நூற்றுக் கணக்கான் ஆதாரங்கள் உள்ளன. மேனேஜ்மெண்டே மாறிட்டுங்கோ!!!

இப்படி இரகசியமாக முடிவுகள் எடுத்து சட்டவிரோதங்கள் செய்து பித்தலாட்டம் செய்யும் இந்த  பிஷப் இவானுக்கு ஒரு பொய்யான விழா எடுக்க வேண்டுமா? பாதிரியார்கள் சற்று சிந்திக்கலாமே!!!

ஒருவேளை இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளுக்கேற்ற வகையில் தீமை மட்டுமே செய்துள்ள இவான் வெட்கப்பட வேண்டும், நாணி தலை குனிய வேண்டும் என்ற நோக்கில் இவ்விழாவினை நடத்தி கூட இருக்கிற பாதிரியார்களே தண்டிக்க நினைக்கிறார்களோ?

அல்லது எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல என்ற அடிப்படையில் இந்த தீய பிஷப் இவான் அம்புடோஸுக்கு விழா எடுத்து கேவலப்படுத்த நினைக்கிறார்களோ?

பலரும் பல கோணங்களில் சிந்தித்து புலம்புகிறார்கள்.

Open Letter to Bishop Yvon Ambroise

We happened to receive the following letter. Ave Maria appreciates the priest who has written this open letter. While most of the letters about the Bishop are anonymous, this has been sent properly and bravely. I think the Bishop must be angry with this priest. Instead of thinking about his false administration, he would immediately think about the punishments to be inflicted on him. Yvon Bishop is treating the priests and faithful as slaves. No one should ask questions. There are some priests who are always praising him to heaven only to get privileges and favours from him. They do not know that he is not deserving to the praises. What has he done for our diocese? We are pleased to publish this small piece of thought provoking and brave letter. The Bishop will not worry about it. But we we hope that this small piece of authentic writing will open the eyes priests of Tuticorin Diocese.

தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் அவர்கட்கு மனம் திறந்த கடிதம்.                                                     

ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில், எம் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு, தாங்கள் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்து கிறேன்; தங்களது ஆசீர் வேண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன்.

2017 தங்களின் பணி நிறைவு ஆண்டு என்பதால், ஏப்ரல் ஐந்தாம் தேதி கடிதம் தந்து, பதிமூன்றாம் தேதிக்குள் குருக்கள் மாமன்றத்தில் மனம் திறந்த பகிர்வு செய்வதற்காக, கருத்து கேட்கிற தாழ்மைக்காக நன்றி.

1) “புனித சவேரியார் ஏழை மாணவர் நிதி” என்ற அமைப்பை தாங்கள் உருவாக்கி, எத்தனையோ ஏழைகளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த புனிதமான சேவையை, 2017 ஆகஸ்டு மாதத்தில் பணி நிறைவு பெற்றுச் செல்லவிருக்கும் தங்களுக்கு அடுத்து வரும் ஆயர் அல்லது பொறுப்பாளர்  தொடரச் வேண்டும் என்பது நல்லோரின் மன்றாட்டு. தொடரச் செய்வீர்களா?

2) கடந்த மாதம் குருக்கள் பேரவைக்கு (ஈ மெயில் வசதி உள்ளவர்களுக்கு) ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். தங்களுக்கும் நகல் அனுப்பியிருந்தேன். நான் அனுப்பியது அதிகாலை 12.32 க்கு. ஆனால், அன்றே காலை 10.30க்கு  தங்களது செயலர், தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். ஒரு பிரச்னைக்குப் பதில் அனுப்பி விட்டீர்கள். துரித சேவைக்காக வாழ்த்தாமல் இருக்க முடியுமா?

இதுபோன்றே, மற்ற நீதியான கோரிக்கைகளுக்கும் பதில், விரைவில் தர வேண்டு மல்லவா? நீதியான முறையில், எனக்கு என்றோ தந்திருக்க வேண்டிய, இரு சக்கர வாக னத்தை தந்து விடுவதாக, வருடங்களை, மாதங்களை, நாட்களை மாற்றி மாற்றி, இப்பொ ழுது வருகிற 2017 ஜூன் மாதத்திற்குள் என்று சொல்லியுள்ளீர்கள்.

இப்படிப்பட்ட வாக்குறுதிகளை, பிரச்சனையின் முன்னுரிமை அறிந்து, உரிய நேரத்தில் நிறைவேற்றிவிட்டால், பாதிநாள் வெளிநாட்டிலும், பாதி நாள் குருக்களுக்கு தேவையில்லாத கடிதங்கள் எழுதி வேதனைப்படுத்தும் குற்றச்சாட்டும் மெதுவாக 2017 ஆகஸ்டுக்குள் மங்கிவிடும். வாக்குறுதி நிறைவேறச் செய்வீர்களா?

3)வழக்கமாக  INTER NOS ல் சுமார் பதினாறு பக்கங்கள் மட்டுமே எழுதும் நீங்கள், தங்களுக்கு 2017 ஆண்டு, ஆகஸ்டு இறுதி மாதம் பணி நிறைவு என்பதாலோ, நான்காம் மாதத்தில் நான்கு பக்கங்களில் நிறைவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

4).கடந்த ஆண்டு பில்லர் தியானத்தில், இரண்டு சாதியை தூக்கிப் பிடிக்கும் சில தீவிர குருக்கள், உணவு நேரம் மட்டும், காலம் தவறாமை கடைப்பிடித்தார்கள். மற்ற எந்த வழிபாட்டிற்கோ, செய்திக்கோ வரவில்லை. இதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். ஆனால் கடைசி நாளில், அதை சுட்டிக் காட்ட தைரியம் இல்லாமல், நீங்கள் எல்லாரும் நன்றாக தியானம் செய்தீர்கள்; பங்கு பெற்றீர்கள் என்று வாழ்த்தினீர்கள். அப்படியானால், அவர்கள் உங்களை பயமுறுத்துகிறார்களோ என்று பேசப்படுவது உண்மைதானோ?  என்ன சொல்லி பயமுறுத்துகிறார்களோ என்பதுதான் மறைபொருளாக உள்ளது.

5.)மறைமாவட்டத்தைப் பிரிக்கிறேன் என்று, தூத்துக்குடிக்குள்ளும், அருகிலும் உள்ள பங்குகளை வள்ளியூரில் சேர்க்கவும் துணிந்தீர்கள். (அதை எதிர்த்து “கத்தோலிக்கர் களுக்கு அவசர கடிதம்” என்று, எனது பத்திரிகையில் மட்டுமல்ல, தினத்தந்தி, தினமலர், தினமணி, மாலை முரசு என்று நான்கு தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிட்டேன். அது உண்ணாவிரதப் போராட்டமாக பரிணமித்தது. தமிழக முதல்வர், கவர்னர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர்  போன்றோருக்குக் அவசர கடிதம் எழுதி, மறை மாவட்டத்தில் சாதிக் கலவரம் ஏற்படலாம் என்று மனு அனுப்பினேன். தங்களுக்கோ அது பிடிக்கவேயில்லை. அரசின் தரப்பிலிருந்து எச்சரிக்கை வந்ததால், மறைமாவட்ட பிரிவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உடனே அவசர சுற்றறிக்கை அனுப்பி உங்களது திட்டத்தை நீங்களே நிறுத்தி விட்டீர்கள், மிக்க நன்றி.

உங்களது திட்டத்தின்படியே மறைமாவட்டத்தைப் பிரித்தால் எத்தகைய படு பாதகங்கள் ஏற்படும் என்று மறைமாவட்டமே மிகவும் கவலைப்பட்டது. இனி நீங்களோ அல்லது தங்களுக்கு அடுத்து வரும் ஆயர் அல்லது பொறுப்பாளரோ மறைமாவட்டத்தைத் தவறாக (அதாவது கிறிஸ்தவக் கண்ணோட்டத்திற்கு எதிராக அல்லது நற்செய்தி விழுமி யங்களுக்கு எதிராக) பிரிக்கும் செயலை செய்யாமலிருக்க ஏற்பாடு செய்வீர்களா?

6) கடந்த குருக்கள் பேரவை கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் வாக்குமூலத்தின்படி மறைமாவட்டத்தில் தற்போது 15 இலட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது என்றும், மற்றொரு உறுப்பினரின் வாக்குமூலத்தின்படி கொஞ்சமே உள்ளது என்றும் குறிப்பிட்டு, நம் மறைமாவட்ட பொருளர் சங்கைக்குரிய சகாய ஜோசப் எப்படித்தான் சமாளிக்கிறாரோ என்று வானளாவ பாராட்டியிருக்கிறீர்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் 20 இலட்சம் ரூபாய்க்கு தங்களுக்கு புதிய வாகனம் வாங்கித் தந்திருக்கிறார். இதற்கும் பாராட்டியிருக்கலாமே?

7) சுனாமி நிதி உதவி பற்றிய வெள்ளை அறிக்கையை மக்களும் குருக்களும் கேட்டும் இதுநாள் வரை பதிலே இல்லை என்கிறார்கள்.  2017 ஆகஸ்டில் தாங்கள் செல்வ தற்கு முன்பாவது, புள்ளி விபரங்களுடன் வெள்ளை அறிக்கையை வெளியிடுவீர்களா?

8) மேதகு தாமஸ் ஆயர் முதல்முறை தன் சொந்த ஊராகிய இடிந்தகரை வந்தபொழுது, இடிந்தகரை மக்கள், 101 பவுண் தங்கத்தில் செங்கோல் மேல் வளைவு செய்து கொடுத்தார்களாம். இடிந்தகரை வரும்போதாவது அதை ஆயர் கொண்டு வரலாமே என்று சில மாதங்களுக்கு முன்பாக நீங்கள் இடிந்தகரை வந்திருந்தபொழுது ஒருவர் கேட்டார்.

கடந்த ஆண்டு ஒருவர் இது பற்றிய விபரம் கேட்டு இருமுறை பதிவுத் தபால் அனுப்பியிருந்தார். மனிதநேயமிக்க தாங்கள் பதில் ஏதும் வழங்க வேயில்லை. 2017 ஆகஸ்டுக்கு முன்பாவது, இடிந்தகரை மக்கள் அடிக்கடி விசாரிக்கிற ஐயம் தீர்ப்பதை செய்வீர்களா?

9) ஏப்ரல் மாத நிகழ்வில் ஒரு நாள் கூட வெளிநாடு பயணம் இல்லை. உங்கள் முன்னுரிமை எல்லாம் நீங்கள் நியமிக்கப்பட்ட தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கே சொந்தம் என்ற தூய ஆவியானவரின் குரலைக் காலதாமதமாகக் கேட்டாலும் இப்பொழுது  செயல்பட முன்வந்த தங்களின் உயர்ந்த எண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

10)  உங்களது பணிக்காலம் 2017 ஆகஸ்டில் முடியப்போவதால், கடந்த குருக்கள் தியானத்தின் கடைசி நாளில், 2017 ஆகஸ்டு முடிவில் சென்று விடுவதாக வாக்குறுதி அளித்தீர்கள். அதை உறுதிப்படுத்துகிறவிதமாக, 2017 ஏப்ரல் 11 குருத்துவ வாக்குறுதி நாள் புதுப்பித்தல் நாள் திருப்பலி மறையுரையில், “குருத்துவத்தில் ஒன்று முதல் 70 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள குருக்கள் இதுநாள்வரை தந்த ஒத்துழைப் பிற்காக முதற்கண் நன்றி” என்றும், மறையுரையின் இறுதியில், “வாழ்த்து கூறி விடை பெறுகிறேன் நன்றி” என்றும் சொன்னபோது அனேகரின் முகங்களில் மகிழ்ச்சி கண்டேன்.

மறைமாவட்டத்தில் பல கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அவைகளை அடைத்து விட்டு செல்ல கால நீட்டிப்பு நீங்கள் கேட்டிருப்பதாகவும் ஒரு வதந்தியை சிலர் பரப்புகிறார்கள். நான் அதை நம்பவில்லை. உங்கள் வாக்கை மீறமாட்டீர்களே? ஒருவேளை, தாங்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடுமானால், குருக்களுக்கு எதிர்சாட்சியாக நீங்கள் மாறிவிடுவீர்களே? ஒவ்வொரு குருவும் கடன் இருக்கிறது என்று சொன்னால் அதே பங்கில் நீங்கள் அந்நபரை தொடர விடுவதில்லை என்பதும் நீங்கள் மறவாத உண்மைதானே?

நீங்களே பல வழக்குகளை நடத்தி பல இலட்சங்களை விரயம் செய்து கொண்டிருப்பதும்; நீங்கள் பயன்படுத்தும் வழக்கறிஞரோ, தமிழ் மாநில அளவில் RSS ன் முக்கிய தலைவராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் செயல்படும் நபர் என்பதும் எமக்கு கவலையான செய்தியாகும்.

அப்படியே கடன் இருந்தாலும், நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்பதே அநேகரின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.  உங்களமேல் எத்துனை அன்பு, பாருங்கள்.!

ஒருவேளை, உங்களுக்குப் பின் மறு ஆயர் உடனே நியமிக்கப்படாவிட்டாலும், ஒருவேளை உங்களைத் தொடரச் சொன்னாலும், நீங்கள் தந்த வாக்குறுதியின்படி, மறைமாவட்ட ஆயர் பொறுப்பை பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த குருக்களின் இந்த வேண்டுகோளை செய்வீர்களா?

11) முந்தைய ஆண்டுகளில், ஒருவரே குருக்களின் பணி இடங்களை நியமித்திருக்கிறார் என்று சொல்லப்படுவதாலும், நீங்களே பணி இடங்களைக் குறித்து வந்து, ஆலோசனை உறுப்பினர்களை ஆமென் சொல்ல பழக்கியிருப்பதாகவும் பேச்சு இருப்பதால், பாவப் பரிகாரமாக, உங்களது பணி வாழ்வின் இறுதி ஆண்டு 2017 பணி நியமனமாவது நீதியாயிருக்கும்படி செய்வீர்களா?

12) அநாதை பிள்ளைகளின் நிலத்தை விரிவாக்கவேண்டியது உங்கள்  கடமையாகும், ஆனால், பல ஏக்கர் நிலங்களை விற்றது; ஆயர் இல்லத்தை சூழ்ந்திருக்கிற, அறநிலையத்திற்கு சொந்தமான வீடுகளையும் கடைகளையும் மிகக் குறைந்த விலையில் விற்றது; ஆங்கில வழிக் கல்விக் கூடம் கட்டுவதற்காக என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்பொழுது நமக்குரிய பக்கத்து தமிழ் பள்ளிக்கூடங்களையும் பாதித்து, போதுமான எண்ணிக்கையும் கிடைக்காமல், தோற்றுப்போன சாத்தான்குளம் ஆங்கில வழிக் கல்விக்கூடம் கட்டியதற்கான உங்கள் கனவு நிறைவேறாமல் போனதை நினைத்து  நாங்கள் கண்ணீர் வடிக்கத்தான் முடியும். வேறென்ன செய்ய முடிகிறது?

இப்பொழுதும் கூடுதல் நிலம் விற்பனை காரியத்தில் தந்தை இசிதோர், “இது மனசாட்சிக்கு எதிரானது” என்று மறுக்க, “கீழ்ப்படி”(OBEY) என்று நீங்கள் மிரட்டுவது நியாயமா?

இன்னும் 100 பக்கங்கள் எழுத மனம் துடிக்கிறது. ஆனால்,வலிக்கிறது; ஆகவே, என் விரல்களுக்கு கட்டளை கொடுக்கிறேன்.  இக்கடிதத்தில் கருத்து, எழுத்து பிழை இருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் மேல் எனக்கு பகையோ வெறுப்போ கிடையாது. நம் கத்தோலிக்கத் திருச் சபை மீதுள்ள தணியா தாகம்தானே தவிர வேறொன்றுமில்லை. ஆகவேதான்  பெயரில்லாமல் எழுதும் கோழையாக இல்லாமல், இதுநாள்வரை என் பெயரில் வெளிப்படையாக எழுதியுள்ளேன், இதனை நீங்கள் புரிந்து கொண்டால் ஆண்டவராம் இயேசுவுக்கும், ஆயரான உங்களுக்கும்  கோடி நன்றி.

2011 செப்டம்பர் 11 ம் தேதி அன்று, கடற்கரை மக்கள் தங்களை சந்திக்க வந்தபோது, வேலைப்பளுவின் காரணமாகவோ, ஆழ்நிலை மன்றாட்டின் காரண மாகவோ, அறைக்குள் இருந்துகொண்டு சந்திக்க மறுத்தும், பின் மனம் இரங்கி, இறங்கி வந்தீர்கள். ஆனால், அவர்களை சந்தித்து திரும்பும் போது, “இவர்களுக்காக பரிகார பூஜை வைக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தீர்கள். “இவர்களும் உங்களது  பிள்ளைகள் தானே, உங்களது ஆட்டுக் குட்டிகள்தானே?” என்று கலங்கினேன். ஆகவே, என்னைப் போன்றோர்மீது கோபம் கொள்ளாமல், ஆசீர்வதியுங்கள்.

இறையாசீர் வேண்டும்,

தந்தை. ஜேம்ஸ் பீட்டர்.

நகல்: தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள்.

 

இசக்கியின் பகல் கொள்ளை

dominicஇசக்கி பகல் கொள்ளை அடிக்கிறார்.

Kalvi Seithimadalஆவே மரியா சங்கம் செஸ் பிடித்தத்தை எதிர்த்து ரிட் மனு 8014/99 நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 10.04.2003ல் நீதிமன்றம் பிற்ப்பித்த் ஆணையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மேலாளர், தான் பிடித்தம் செய்யும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை எதிர் மனுவில கீழ்கண்டவாறு கூறியுள்ளார். அதில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் அரை சதவீத பிடித்தத்தில் அன்பளிப்பு கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதை ஆவே மரியாவும் மறக்கவில்லை ஆசிரியர்களும் மறக்கவில்லை. இதை எல்லாம் நாம் மறந்து விட்டதாக எண்ணி இசக்கி பிஷப் இவான் அம்புரோஸ் அனுமதியுடன் ஒவ்வோரு ஆசிரியரிடமுமிருந்து ரூபாய் 200 வீதம் 3 மாதங்கள் பிடித்தம் செய்ய ஆணை இட்டுள்ளார். அதாவது பகல் கோள்ளை அடிக்கிறார். ஆசிரியர்களே உஷார். ரூபாய் 600.00 வீதம் பிரித்தால் குறைந்த பட்சம் 12 லட்சம் தேரும். கொள்ளையோ கொள்ளை.

7. It is submitted that quite a lot of activities are being carried on by the Diocesan Association for achieving academic excellence in the studies and all round development of the student community. There are regular conferences and refresher courses etc., which are conducted for updating the knowledge of the teachers so as to keep them in the mainstream of education. The Association also interacts with the educational authorities so as to quicken the process of properly extending all the benefits available to the teachers and if need be the Association also legally fights for the cause. The Association also runs on the house monthly magazine namely “Kalvi Chiethi Madal” where by all the Govt. orders, Educational guidelines, the rules and regulations and matters of importance concerning the Schools are brought out. It is submitted that the children of staff who obtain meritorious marks in the S.S.L.C. and plus 2 examinations are given monetary incentives. Further, whenever a teachers (Sic) retires, a farewell function is held by all the staff and the retiring teacher is bestowed with usual gifts apart from a purse of Rs. 10,000/- . If any teacher happens to expire in harness a solarium of Rs. 10,000/- is paid to the family of the deceased person.

8. It is submitted that to mete (Sic) out the above expenses and also to defray the costs of administration of all the Diocesan Schools falling within the jurisdictions the teachers contribute half percent of their salary after the statutory deductions.”

கோர்ட் ஆர்டரை முழுதுமாக வாசிக்க கீழே காணும் இணைப்பை க்ளிக் செய்யவும்.

http://www.catholicschoolsatrocities.org/?page_id=13

ஆசிரியார்களை இந்த இசக்கி டிஸ்மிஸ் செய்துவிடுவேன் ச்ஸ்பெண்ட் பண்ணிவிடுவேன் என்று மிரட்டி வருகிறார். அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் செய்ய முடியாது. சட்டம் நமது கையில். மைனாரிட்டி உரிமையையே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை FCRA நம்பரைப்போல புதுதுப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை ஏன் கல்வி சுற்று மடலில் வெளியிடவில்லை? இந்த அரசு ஆணை எண் 214 நாள் 03.11.2008ஐ எதிர்த்து Tamilnadu Catholic Educational council ரிட் மனு 16967/2009 தாக்கல் செய்து, அரசு எதிர் மனு தாக்கல் செய்யாததால், தடை ஆணை பெற்றுள்ளது. அரசின் மெத்தன போக்கால்தான் இசக்கி ஆட்டம் போடுகிறார். இவ்வழக்கில் ஆவே மரியாவும் ரோமன் கத்தோலிக்க டயசிஸ் ஆஃப் தூத்துக்குடியும் implead ஆகுவதற்கு நடவடிக்க்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சியை சேர்ந்த நமது இயக்க உறுப்பினர்கள் டாக்டர் ஜேசுதாஸ், திரு. லாரன்ஸ் மரிய அந்துவான், திரு. டேனியல் ராஜ், திரு. பன்னீர் செல்வம் மற்றும் திரு. லாரன்ஸ் ஜெயராஜ் ஆகியோர் ஏற்கனவே இம்ப்ளீடிங் மனு தாக்கல் செய்துவிட்டனர் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும். அரசை ஏமாற்றலாம். நமது இயக்கங்களை இசக்கி ஏமாற்ற முடியாது. இசக்கி, தான் ஒரு ஆசிரியரிடம்தான் கல்வி கற்றார் என்பதை மறந்து ஏதோ வானத்தில் இருந்து நேரடியாக குதித்தவர்போல துள்ளாட்டம் போடுகிறார். தான் பாதிரியாராக ஆகுமுன்னால் எப்படி இருந்தார் என்பதை மறந்து ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படுகிறார். Bishopஇவருக்கு அனுமதி கொடுப்பதற்கு நமது மறை மாவட்டத்தில் ஒரு பிஷப் வேறு!!! வெட்கம்!! கிறிஸ்தவ மதத்தையே நாசம் செய்துவிட்டார்கள். தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவான்தான் இந்த நாச வேலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவருடைய செருக்கு, ஆங்காரம், ஆணவம், மமதை, சின்னத்தனம், சுயநலம், அறியாமை அனைத்தும்தான் சீரழிவுக்கு காரணம்.

Tamilnadu Catholic Educational Council எனற மனுதாரரின் typed-setல் உண்மைக்கு புறம்பான விவரங்களும் ஆவணங்களும்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆவணங்களும் நமது அலுவலகத்தில் உள்ளன.

அப்பப்பா! என்னா பொய்! வெள்ளை அங்கி போட்டு பூசை, பிரசங்கம் வைக்கவேண்டிய குருக்கள் கருப்பு அங்கி போட்டு கோர்ட்டுல பச்ச பச்சயா பொய் சொன்னா கிறிஸ்தவம் எங்க வளரும்!!!! கேவலம்!!!

இதுல நாலு சிஸ்டர் வேற. கோயிலில் இருப்பதற்குப்பதில் கருப்பு அங்கி போட்டுட்டு கோர்டுல காத்துக்கிடந்து பொய் சொல்றாங்க!!!!

Tamilnadu Catholic Educational Council எனற மனுதாரரின் typed-setல் உண்மைக்கு புறம்பான விவரங்களும் ஆவணங்களும்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆவணங்களும் நமது அலுவலகத்தில் உள்ளன.

Problems in Tiruchy Diocese

Maladministration and misappropriation of funds are very normal in Tiruchirapalli Diocese. Also suppressing the inncent people by power and money are very common in the Tiruchirappalli Roman Catholic Diocese. Here are some documents. It seems that whoever asks questions are punished by the Tiruchirappalli Roman Catholic Diocese. It is a pity that jusrtice cannot be established in this diocese. The following documents show how Dr. Jesudoss and his like-minded people are trying to attain justice from the Diocese of Tiruchirapalli. Dr. Jesudoss cannot attain justice. But he is resoluted to attain justice. The government is reluctant to take action against the Bishops and priests. Because the Government believes that Catholic Christian Bishops and priests are angels. It does not know that only a few priests are practising real catholic principles. But they are put in the dust-bin of the Bishops. Government and other communities are respecting the catholic bishops and priests. But they do not deserve it. If the faithful are silent on seeing the illegalities and criminal activities of the clergies, there will be chaos in the Catholic communities. Because, as per the Christian Principles, keeping silence on seeing injustice is also a sin. Hence the faithful are entitled to find solutions to the problems. Here are some documents to show the problems. To read the documents please click the following link.

Efforts of Dr. Jesudoss

ஒரே சட்டம் வேண்டும்!!! பாகுபாடு வேண்டாம்!!!

minority1

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 10.10.2012 நாளிட்ட ஆணையில் New Comprehensive Act நடைமுறைக்கு வரும் வரை 17.12.1975ல் உள்ளபடி Status quo என்று ஆணையிட்டுள்ளது என்பது கல்வித்துறைக்கும் அரசுக்கும் நிர்வாகங்களுக்கும் தெரியும். இவ்வழக்கில் அரசு இன்னும் தொடர் நடவடிக்கை எடுக்காததால் எத்தனையோ ஆசிரியர்கள் மைனாரிட்டி என்ற பெயரில் பல்வேறு துன்பத்துக்கு ஆளாகிறார்கள். அனைத்து வகை உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் சம்பளம் கொடுப்பது அரசு. ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் Service Conditions ஒரே மாதிரியாக உள்ளது. அப்படியிருக்க மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்கள் மட்டும் மேல்முறையீட்டு உரிமை இல்லாது அவதிப்படுகிறார்கள். கல்வித்துறையின் அனுமதி இன்றி பல்வேறு ஆசிரியர்கள் பணியிலிருந்து வெளியில் தள்ளப்படுகிறார்கள். இது பாகுபாடான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்புமா? சமத்துவம் இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் அல்லோல் படுகிறார்கள். மைனாரிட்டி நிறுவனங்கள் தாண்டவம் ஆடுகின்றன. சமத்துவத்தை உருவாக்க ஒரே சட்டம் தேவைப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை இவ்வழக்கின் ஆணை நகல் கிடைத்தவுடன் சங்கம் முடிவு செய்யும். 

தாளாளர் சகாய ராஜ் ராயனின் தாண்டவம்

சொக்கன்குடியிருப்பு மணல் மாதா மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் திரு. ஜெயசிங் குருஸ் ஆஞ்சலஸ். இவர் கணித பாடம் நடத்துவதிலும் ஆங்கிலம் நடத்துவதிலும் திறமையானவர். அல்லும் பகலும் அயராது உழைப்பவர். கிராமத்து பள்ளியானாலும் அவரது பாணியில் பயிற்சி கொடுத்து மாணவர்களை அதிக மதிப்பெண்களை வாங்க வைப்பவர். கிராமப்புறத்து மாணவர்களுக்கென நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வில் இவரது பள்ளியில் இருந்து பல மாணவர்கள் வெற்றி பெற்று இன்றளவும் பலன் பெற்று வருகின்றனர். சிறிது கண்டிப்பானவர். தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி பாடங்களில் குறைவான தேர்ச்சி அடையும் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பவர். தன் கையிலிருந்து பணம் செலவழித்து பல மாணவர்களுக்கு உதவி செய்பவர். இவரது பள்ளியில் ஆறு முதல் பத்து வகுப்புகளுக்குதான் அரசின் நிதி உதவி கிடைக்கிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு அரசின் நிதி உதவி கிடையாது. இருப்பினும் நல்ல தேர்ச்சி விகிதங்களை கொணர்பவர். பல ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் இப்பள்ளிக்கு அங்கீகாரம் புதுப்பிக்க முயன்று வருகிரார் என்பது தெரிய வருகிறது. பாதிரியார் சகாய ராஜ் ராயன் என்பார்தான் இப்பள்ளியின் தாளாளர். இச்சூழலில்  தலைமை ஆசிரியரின் அனுமதி இன்றி உதவி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளார். இதற்கு உடந்தையாக தாளாளர் இருந்துள்ளதாக தெரிகிறது. அனுமதி இன்றி இவ்வாறு மாணவர்களை அழைத்து சுற்றுலா செலவது தவறு என தலைமை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை தாளாளர் தவறாக எடுத்துக் கொண்டுள்ளார். விஷயம் புகைய ஆரம்பித்திருக்கிறது. தாளாளர் அவ்வூரில் கோயிலில் பூஜை செய்யும் நபராகவும் இருப்பதால் ஊரை தூண்டுவதற்கும் மாணவர்களிடம் பேசுவதற்கும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. தனது அதிகாரத்தை துர்பிரயோகம் செய்து ஆசிரியையின் உதவியுடனும் தனக்கு வேண்டிய பெண்களின் உதவியுடனும் சில மாணவிகளிடம் இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் அவசர அவசரமாக எழுதி வாங்கி ஏற்கனவெ இவ்வூரில் பாதிரியாராக இருந்து தற்போது கண்காணிப்பாளராக இருக்கும் இசக்கி என்ற டொமினிக் என்பாரிடம் கொடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியிருக்கிறார். இசக்கி என்ற டொமினிக்குக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பொழுது போக்கு. உடனே அவரும் சம்மதித்திருக்கிறார். அவருக்கு மேலதிகாரியான மேலாளர் இவான் அம்புரோஸ் இசக்கி என்பார் நீட்டும் எந்த பேப்பரிலும் கையெழுத்திடும் பழக்கம் உள்ளவர். அவர் உடனே சஸ்பெண்ட் செய்து ஆணையிட்டுள்ளார். மனித நேயமுள்ள ஒரு நல்ல மேலாளர் சஸ்பெண்ட் செய்யுமுன் சம்மந்தப்பட்டவரை அழைத்து அவரது கருத்துக்களை கேட்டு உண்மை நிலவரத்தை அறிந்து அதன்பின் தேவைப்படின் நடவடிக்கை எடுப்பார். ஆனால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் எடுத்தேன் கவுத்தேன் என்று சஸ்பெண்ட் செய்து அதில் இன்பம் காண வந்துள்ளவர் டாக்டர் இவான் அம்புரோஸ். தமிழ் நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 1973ன் படி தண்டனை கொடுக்குமுன் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி வேண்டும். அதை பின்பற்றாமல் இந்த சஸ்பெண்ட் விஷயம் நடந்துள்ளது. இப்பள்ளி மைனாரிட்டி பள்ளி அல்ல என்பதும் போலியான ஆவணங்களைக்காட்டிதான் இச்சலுகையை அனுபவித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலும் இவருக்கு பிழைப்பூதியம் கொடுக்கப்படவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் 4 மாதங்களுக்கு மேல் ஒரு நபரை  தற்காலிக பணிநீக்கம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் இவ்வாசிரியரை 8 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்கள். ஆசிரியருக்கு கொடுக்க வேண்டிய ஆதாரங்கள் கொடுக்கப்படாததால் விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் தற்போது தற்காலிக பணிநீக்க ஆணையையும் தடை செய்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற ஆணையை இணைத்து முறைப்படி பள்ளியில் 22.09.2016 அன்று பணியில் சேர்ந்துள்ளார். இதை தாங்க முடியாமல் sahayaraj-rayanதாளாளர் சகாய ராஜ் ராயன் தனக்கு வேண்டிய ஆசிரியைகளை கையில் எடுத்துக் கொண்டு கைபேசி மூலம் தூண்டி விட்டு பள்ளியில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது. தாளாளர் சகாய ராஜ் ராயன் இப்போது பழையகாயலில் உள்ளார். அவர் இப்பள்ளிக்கு வருவதே கிடையாது. ஆனால் இவ்வாசிரியரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக மாறுதலாகி சென்ற பிறகும் தன்னிடமே பள்ளிப் பொறுப்பை வைத்துள்ளார். இதற்கு மேலாளர் அனுமதி வழங்கியுள்ளார். பாதிரியார் சகாய ராஜ் ராயன் இந்த அளவுக்கு மோசமான பழிவாங்கும் எண்ணம் உள்ளவர் என்பதை அறியும் போது இவர் ஒரு பாதிரியாரா? அதுவும் தினமும் “எங்களுக்கு தின்மை செயதவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்” என்று பீடத்தில் நின்று கூறும் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியாரா இவர் என்று எண்ணத்தோணுகிறது. கத்தோலிக்க பாதிரியார் பள்ளியில் குழந்தைகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறார் என்பதை அறியும்போது கத்தோலிக்க மத போதனை மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுகிறது. ஏன் கத்தோலிக்கர்கள் பிற சபைகளுக்கு செல்கிறார்கள் என்பதற்கு இப்போதுதான் காரணம் தெரிகிறது. எப்போதுமே நீதிமன்றங்களை மதிக்காத டாக்டர் இவான் அம்புரோஸின் உதவியாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவரைப்போலத்தான் இருப்பார்கள்.!!!

Certificate for Catholic Schools Administration

priests-dissatisfactionclean-copyThe school administration of The Tuticorin Diocesan Association got worse even years back. We are pleased to publish a memorandum prepared and signed by 14 priests at the vicariate level meeting held in Satankulam on 19.02.1998. Not the teachers, but the Rev. Fathers themselves were dissatisfied with the school administration of the Diocese of Tuticorin. When it was sent to the Bishop, he did not take any action against the priests. He did not use his ecclesiastical authority to punish them under canon law. Because the administration was worse by that time itself. Here you can see the signed copy. Since you cannot recognize the names of the priests by signature, we are publishing the clean copy also.

Important note 1:- We would like to bring to the kind notice of the public that Fr.Xavier Arul Raj signed this memorandum on 19.02.1998. But he took disciplinary action against a teacher stating that he had informed the Directorate about the illegalities of this management. The teacher confirmed the statement of this priest. The priest was not punished foe expressing his opinion through signed memorandum. But the teacher was punished in the same year with dismissal.

Important note 2:- Fr.Edward, who is the close friend of the present Bishop Yvon Ambroise, has also signed this memorandum. Even in 1998 he brought his dissatisfaction over the school administration to the notice of the center. In the period of Dr. Peter Fernando also he maintained the same opinion about the school administration. When he was promoted to the post of Vicar Forane for Satankulam the whole situation changed. He started praising Bishop Yvon Ambroise. We appreciate his character of showing gratitude by praises. He should have stopped at that level. But, during mass in Satankulam and in other meetings, he announced the public that AVE MARIA has been going against the diocese. Alas! he forgot that he had already affirmed our statements officially in the memorandum dated 19.02.1998. It is he who sent his dissatisfaction about the school administration to the Diocese first. But he is blaming AVE MARIA. Why he is always asking the Bishop to take action against AVE MARIA? Why this Bishop pays attention to the words of this priest? Why the Bishop has gone to the extent of saying amen to the words of this Priest. Why this priest plays important role even in the matter of taking actions against priests and the faithful? The Bishop is said to have been consulting him regularly before entering for the meetings. Why? Perhaps the Bishop and Fr.Edward may know the reasons behind these activities!!!

We have published the clear-cut document. Can the Bishop take action against these priests for going against the diocese. Of course, he cannot take action against the deceased!!! But most of them are alive!!!

Comedy of Errors!!!

1923ல் துவங்கப்பட்ட தூத்துக்குடி மேற்றிராசனத்தை சார்ந்த பல்வேறு பாதிரியார்களின் நிலமை அவர்களுக்கே தெரியாது என்பதை ஆவே மரியா வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. The Tuticorin Diocesan Association என்ற NGO-வில் தாங்கள் உறுப்பினரா என்றும் எந்த தேதியில் தாங்கள் உறுப்பினர் என்றும் தெரிந்து கொள்ளட்டும். 2014-15 ஆண்டு உறுப்பினர்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்க Members of the NGO Tuticorin Diocesan Association in 2014-2015 மேலும் 2014-15 ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பட்டியல் வேண்டுமா? க்ளிக் New Members joined TDA in 2014-15

இப்போ எல்லாருக்கும் அவரவர் உறுப்பினரா என்றும் என்றைக்கு உறுப்பினரானார் என்றும் தெரியும். பிஷப் இவான் அம்புரோஸ் என்றைக்கு உறுப்பினராக ஆனார் தெரியுமா? 28.09.2005. பிஷப் பட்டம் பெற்ற தேதி 18.05.2005. நான்கு மாதங்களுக்குப்பிறகுதான் அவரை மேற்படி சங்கம் உறுப்பினராக சேர்த்துள்ளது. அதாவது 130 நாட்கள் கழித்து. ஆனால் 19.05.2005 லேயே அதாவது அவர் உறுப்பினர் ஆகுமுன்பே மேற்படி சங்கத்திற்கு அவர் தலைவர் ஆகிவிட்டார் என்று சான்று வழங்கி அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் பாவம். கத்தோலிக்க பிஷப் பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். மேற்படி NGO, பிஷப் அமலநாதர், பீட்டர் பெர்னாண்டோ மற்றும் இவான் அம்புரோஸ் ஆகியோருக்கு பிறப்பித்துள்ள நியமன ஆணைகளை வாசிக்க வேண்டுமா? க்ளிக் Appointment orders of Bishops Amalnather Peter Fernando and Yvon Ambroise இப்போ இவருடய அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்விக்குறி எழுகிறதா? மேற்படி NGO வில் எந்த வருடத்தில் இருந்து மெம்பர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்? இதுவும் பாதிரியார்களும் பொதுமக்களும் யோசிக்கவேண்டிய ஒரு விசயம்!!!. பிஷப் இவானுடைய காமெடி ஒன்றை கீழே தருகிறோம். யாராவது ஒரே ஆளுக்கு ஒரே பதவிக்கு 3 வகையான நியமன ஆணை கொடுப்பார்களா? சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல பாதிரியார் எம்.ஜி.விக்டருக்கு கொடுத்துள்ள மூன்று வகையான நியமன ஆணைகள் இதோ. முதல் ஆணை Appointment order of Fr. M.G.Victor இதே பாதிரியார் மலையன்குளம் பங்கு சாமியான பிறகு, கண்காணிப்பாளர் என்ற நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஆசிரியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். பாதிரியார் டொமினிக் (இசக்கி) கண்காணிப்பாளராக இருக்கும்போது மனுவில் பாதிரியார் எம்.ஜி.விக்டர் கையெழுத்திட்டுள்ளார் என்ற விவரத்தினை எதிர்மனுதாரர் சொன்னவுடன் பிஷப் இவான் அம்புரோஸ், தான் கத்தோலிக்க கிறிஸ்தவர் என்ற ஓரு சிறு உணர்வு கூட இல்லாமல் பொய் சொல்கிறோமே என்ற பயம் இல்லாமல் பழைய தெதியிட்டு பிறப்பித்த பொய்யான ஆர்டர் இதோ பாதிரியார் விக்டருக்கு 16.04.2012ல் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட நியமன ஆணை Page 17 of IA இதை மேலாளர் 14.08.2015ல் கொடுத்துள்ளார். சாதாரண மனிதன் கூட பொய் சொல்ல கூச்சப்படுவான். இவர் ஒரு கத்தோலிக்கர். அதுவும் ஒரு பிஷப். ஒரு பெரிய மனிதர். இவரு இப்படி பொய் சொல்லலாமா? உண்மைக்காக தோற்பதும் ஒருவகை வெற்றிதான் என்பது இந்த பெரிய மனுஷனுக்கு தெரியவில்லையே என்று பலரும் வருத்தப்படுகின்றனர். இதே பாதிரியார் விக்டருக்கு பிஷப் இவான் அம்புரோஸ் மற்றொரு வகையில் நியமன ஆணை கொடுத்துள்ளார். தனது  WMP 138/2011 in WP 570/75 என்ற மனுவில் Type Set ல் 34 வது பக்கத்தில் பிஷப் இவான் இதை இணைத்துள்ளார். அது இதோ Another Appointment order issued to Fr.M.G.Victor இதில் காமெடி என்னவென்றால் Bishop Yvon Ambroise appeared before court as the Superintendent of schools in WMP 138 of 2011 இதில் அடுத்த காமெடி என்னவென்றால் இதே மனுவில் உயிரோடு இருந்த பாதிரியார் ரோசாரியோ பெர்னாண்டோவை இறந்து விட்டார் என்று மேற்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாதிரியார் ரோசாரியோ பெர்னாண்டோ இறந்தது 29.09.2015ல். அன்னாருடய இறப்பு சான்று இதோ. Death Certificate of Fr. Rosario Fernando

பாதிரியார் சந்தானம் என்பாருக்கு கொடுத்துள்ள நியமன ஆணை:- சுப்ரீம் கோர்ட்டில் சிவில் அப்பீல் 1868/14 மற்றும் 1869/14 ஆகிய வழக்குகளில் பிஷப் இவான் அம்புரோஸ் தனது தவறை மறைக்க இணைத்துள்ள நியமன ஆணை இதோ. Appointment order issued to Fr. Santhanam அப்பாய்ண்மெண்ட் தேதி 13.05.1999. Effective from 14.06.1999. இதில் காமெடி என்னவென்றால் பிஷப் இவான், இசக்கி (பாதிரியார் டொமினிக்) மற்றும் திரு.ரெக்ஸ் பாக்கியநாதன் (பாதிரியார் எட்வர்ட் மூலம் பிஷப் இவானுக்கு அறிமுகமான நண்பர். தற்போது பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் திருமதி மார்க்ரெட் என்பாரின் கணவர்) ஆகியோர் சேர்ந்து முன்னாள் மேலாளர் ஆயர் எஸ்.டி.அமல்நாதரின் கையெழுத்தையும் பாதிரியார் சந்தானம் என்பாரின் கையெழுத்தையும்,  அவர்களாகவே போட்டு சுப்ரீம் கோர்ட்டில் இவான் அம்புரோஸ் தாககல் செய்துள்ளார். யாருக்கு வரும் இந்த தைரியம்? இந்த நியமன ஆணை தங்களுக்கு தரப்பட்டதா என்பதை பாதிரியார் சந்தானம் அவர்களிடம் கேட்டதற்கு அவர் “இல்லை” என்ற உண்மையை கூறிவிட்டார். நியமன ஆணையில் தேதி மற்றும் முகவரியை எழுதியிருப்பவர் திரு ரெக்ஸ் பாக்கியநாதன் என்பதை நிரூபிக்க கீழ்கண்ட கடிதங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

29.11.14    Response to RTI Petition dated 29.11.2014

03.12.14    Response to RTI Petition dated 03.12.2014

17.12.14     Response to RTI petition dated 17.12.2014

18.12.14     Response to RTI petition dated 18.12.2014

போலி ஆவண தயாரிப்பில் பிஷப் இவானுடன் சேர்ந்துள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மேற்படி நான்கு தகவலறியும் மனு பதில்களை எழுதினது யார் என வேண்டினதற்கு பொத்தக்காலன்விளை பள்ளி தலைமை ஆசிரியை பதில் தர மறுத்துள்ளார். அவர் தனது கணவரை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. தகவல் ஆணையம் மேற்படி தகவல்களை கொடுக்கும்படி ஆணையிட்ட பிறகும் தகவல்கள் இதுவரை வரவில்லை. தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி நியமன ஆணையில் ஆயர் அமலநாதரின் கையெழுத்தையும் பாதிரியார் சந்தானம் என்பாரின் கையெழுத்தையும் பிஷப் இவான் அம்புரோஸ்தான் போட்டார் என்றும் தான் போடவில்லை என்றும் இசக்கி என்ற சங். டொம்  கூறிக்கொண்டிருப்பதாக செய்தி உலா வருகிறது. உண்மை விரைவில் வெளிவரும். பாராசூட்டை மாட்டிட்டு துள்ளுறதுக்குப்பதில் ஸ்கூல் பேக்கை மாட்டிட்டு ப்ளேன்ல இருந்து துள்னானாம் ஒருத்தன். அதுபோல, அவசரத்தில், அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் தயாரிப்பதற்குப்பதில் ஆத்தரைசேஷன் லெட்டரை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் கொடுத்துவிட்டார் பிஷப் இவான் அம்புரோஸ். இதில் பிஷப் இவான் செய்துள்ள அடுத்த காமெடி என்னவென்றால் எல்லா பொய்களையும் எல்லா போலி ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டு அவைகள் எல்லாம் உண்மை என்று ஸ்ட்ராங்கா கையெழுத்திட்டுள்ளார் பாருங்கள். இந்த தைரியம் ஒரு சாதாரண கத்தோலிக்கனுக்கு கூட வராது. இதோ அவரது தைரியத்திற்கு ஆதாரம் Page 13 of IA

இதுவரை பண்ணின காமெடி போதாது என்று 75 வ்யது முடியும் வரை காமெடி பண்ணுவேன் என்று பிஷப் அடம் பிடிப்பதாக தெரிய வருகிறது. டயோசிஸை சீரழிக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டார் போலிருக்கே என்று பாதிரியார்கள் வேதனையில் உள்ளனர். நேரடியாக கேள்வி கேட்டால் வெளியே தள்ளி விடுவார் என்ற அச்சத்தில் சிலர் கையெழுத்தில்லாத கருத்து தெரிவிப்பு கடிதங்கள் எழுத ஆரம்பித்துள்ளனர். பயத்தினால் கையெழுத்திடாமல் இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மை என்றால் அவைகளை புகார் பெட்டியில் போடப்பட்டுள்ள கடிதங்களாக கருதி மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. எத்தனையோ சாதாரண மனிதர்கள் கூட உண்மைக்காக உயிரைக்கூட விடத்தயாராக இருக்கும்போது இந்த பெரிய மனுஷன் அதுவும் ஒரு கத்தோலிக்க பிஷப் இப்படி அடுக்கடுக்காக பொய் சொல்லுகிறாரே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள். நீதிமன்றங்கள் கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன நினைக்கும்? தனது தோல்வியை அல்லது குற்றத்தை தன்னைவிட சிறியவர்களிடம் ஏற்றுக்கொள்வதுதான் சான்றோரின் குணம்.

மேலும் பல விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயர் அம்புரோஸின் பொய்கள்

Mr. Vidyanandan, the real Expert!


Mr. Vidyanandan
Mr. Vidyanandan was dismissed from service many years back from the minority school, namely Sourashtra Hr. Sec.School, Madurai. But he did not loose hope. He struggled hard to come out of this problem. He became a lawyer and he argued his case as party in person and won the case after getting an order from the Apex court. He used right of appeal and got his job. He has been working for the better service conditions of the teachers working in minority schools all over Tamilnadu. He has filed a number of cases to reach justice. His motto is “Be brave to be honest and be honest to be brave”. PetitionsHis photo is published here. Every one has to appreciate this warrior for his wonderful, continuous, untiring and selfless service for the welfare of the teacher community working in various minority schools in Tamilnadu. Even in this hot summer (May 2016) he has gone to Delhi to file SLP for the welfare of the teachers. He is the best person who has thorough knowledge about minority-right cases filed by the minority managements, appeals of government, review petitions, additional petitions and so on. 20150405_134354He can cite any rule or clause or amendments on the spot without having papers in his hand. He is a very kind person and accessible to any one for legal advice in school and minority issues. Any one can get legal advice in the school issues, especially issues relating to minority schools. He says that all teachers working in minority schools should enjoy service conditions in accordance with law. He further says that the service conditions for the minority school teachers have not been taken away by any order. His efforts are like planting trees of rights in the garden of minority schools for the enjoyment of teachers. We have to salute him and honour him for his selfless service. His family is also supporting him for his selfless social service. The Indian Express has published an article about him on 14.03.2016 in the Madurai Edition. To read the article please follow this link. Indian Express news AVE MARIA is always grateful to him for his wonderful guidance and free legal support. He is the real expert!

 

மேலாளரின் நியமன ஆணையும் நியாயமான கேள்விகளும்

பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளுக்கு மேலாளர் ஆனார் என்று பலர் கேட்கின்றனர். அவருடைய நியமன ஆணை நகலினை பல தடவைகள் கேட்ட பிறகு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார். Bishopஅதை இங்கே பிரசுரிக்கிறோம். Bishop’s appointment order இதை வாசித்தாலே நிர்வாகத்தின் பெயர் தெரியும். Tuticorin Diocesan Association என்ற N.G.O தான் அதாவது Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவன செயலர்தான் இவரை மேலாளர் என்று நியமித்திருப்பதற்கான தீர்மானத்தை அனுப்பி அதை மேலாளரின் நியமன ஆணையாக அனுப்பியுள்ளார். இது சார்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்.

1. இந்த தொண்டு நிறுவனத்தில் (Tuticorin Diocesan Association) பாப்பாண்டவர் உறுப்பினர் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடைய ஆணையின் மூலம் டாக்டர் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளின் மேலாளராக முடியும்? பாப்பாண்டவர் தூத்துக்குடி டயோசிஸின் மேல் அதிகாரி. அவர் பிஷப்பை நியமிக்கலாம். ஆனால் அவரின் ஆணையின்படி பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளுக்கு மேலாளராக ஆக முடியும்? தமிழ் நாடு சங்கப்பதிவு சட்டப்படி இயங்கும் Tuticorin Diocesan Association என்ற N.G.O-க்கும் பாப்பானவருக்கும் சட்டப்படி சம்மந்தம் இல்லை. 1923ல் உருவான மறைமாவட்டத்திற்கும் பாப்பானவருக்கும் சம்மந்தம் உண்டு என்பது உண்மை. டாக்டர் இவான் அம்புரோஸின் பள்ளி நிர்வாகம் மேற்கண்ட இரண்டையும் மிக்ஸ் பண்ணி குழப்பி கல்வி இலாக்காவின் அறியாமையை பயன்படுத்தி பல சட்டவிரோதங்களை செய்கிறது. இது சரியா என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

2. Tuticorin Diocesan Association என்ற N.G.O தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் டாக்டர் இவான் அம்புரோஸ் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீர்மான நகல் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படவில்லை. அதன் காரணம் என்ன?

3. தீர்மான நகல் இல்லாமல் பாதிரியார் தியோபிலஸ்தான் செயலர் என்பது கல்வி இலாக்காவுக்கு எப்படி தெரியும்? எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள் யார் யார் உறுப்பினர்கள் என்பது யாருக்கு தெரியும்? பாதிரியார் தியோபிலஸ் செயலர் என்பதை கல்வி முகமை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதா? இந்த விவரம் தெரியாமல் இருக்கும்போது அவர் கையெழுத்திட்டுள்ள நியமன ஆணை எவ்வாறு செல்லுபடியாகும்? கல்வி இலாகா ஏன் கண்மூடித்தனமாக டாக்டர் இவான் அம்புரோஸ் தலைவராக இருக்கும் கல்வி முகமையை நம்புகிறது?

4. தன்னை மேலாளராக நியமனம் செய்துள்ள மேற்கண்ட Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவனத்தின் பெயரை தான் பிறப்பிக்கும் ஆணைகளில் குறிப்பிடாமல் வேறு பெயர்களை பிஷப் இவான் ஏன் குறிப்பிடுகிறார்?

5.  இதே டாக்டர் இவான் அம்புரோஸ் மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களில் மட்டும் Tuticorin Diocesan Association என்ற N.G.O வின் பெயரை பயன்படுத்துகிறாரே அதன் காரணம் என்ன?

6. இந்த Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவனம் ரிட் மனு 570/1975ல் ஒரு Partyயாக சேர்க்கப்பட்டுள்ளதா? இந்த பெயர் 17.12.1975ல் வெளியிட்ட நீதிமன்ற ஆணையிலோ 10.10.2012 நாளிட்ட ஆணையிலோ இல்லாதிருக்கும்போது இது மைனாரிட்டி நிறுவனம் என்பதற்கு எந்த ஆதாரம் உள்ளது?

7. மேற்படி நியமன ஆணையின் பொருளில் மைனாரிட்டி நிறுவனங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அது பொய்யா? அது உண்மை என்றால் ஏன் மைனாரிட்டி ஆணை பெற்றதற்கான ஆதாரம் அடங்கிய ஆணைகளை குறிப்பிடவில்லை?

8. மேற்படி ஆணை மூலம் மேலாளர் என்ற பதவிக்கு வந்த டாகடர் இவான் அம்புரோஸ் எதற்காக தனது 09.03.2015 மற்றும் 23.06.2015 நாளிட்ட கடிதங்களில் Tuticorin Diocesan Association என்ற பெயரில் எங்களது நிறுவனத்தை பதிவு செய்துவிட்டு The Roman Catholic Diocese of Tuticorin என்ற பெயரில் செயல்படுகிறோம் என்று எழுதியுள்ளார்?

9. ஏன் பதிவு செய்த சட்டப்பூர்வமான நிறுவனத்தின் பெயரில் செயல்படாமல் வேறு பெயரில் செயல்படவேண்டும்? அதற்கான காரணம் என்ன? இதை கல்வித்துறை எந்த விதிகளின் அடிப்படையில் அனுமதிக்கிறது? கல்வித்துறை தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறதா? அல்லது அவ்வாறு இருக்க ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

10. டாக்டர் இவான் அம்புரோஸ் அரசையும் மக்களையும் ஏமாற்றுவதற்குத்தான் ஆயர் பட்டம் பெற்றாரா?

11. டாக்டர் இவான் அம்புரோஸ் என்ன சொன்னாலும் அதை கல்வி இலாகா அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவேதும் பிறப்பித்துள்ளதா?

12. மேற்படி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள மேலாளரின் அதிகாரங்கள் எவை என்று கல்வி இலாக்காவுக்கோ மக்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தெரியுமா?

13. பள்ளிகளுக்கு இதுவரை தனது நிர்வாகத்தின் பெயர், பதிவு விவரங்கள், மைனாரிட்டி உரிமை சார்பான ஆவணங்களை தெரியப்படுத்தியிருக்கிறாரா? அவ்வாறு தெரியப்படுத்தவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன? எதற்காக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உண்மைகளை மறைக்க வேண்டும்?

14. தற்சமயம் பதிமூன்று பேர் உறுப்பினர்களாக இருக்கும் இத்தொண்டு நிறுவனத்தை டாக்டர் இவான் அம்புரோஸ் 4.5 லட்சம் கத்தோலிக்க மக்கள் அடங்கிய தூத்துக்குடி டயோசிஸ் என்று எவ்வாறு கூற முடியும்? ஏன் அவ்வாறு கூறுகிறார்? மத்திய அரசு கேட்ட 32 கேள்விகளுக்கு பதில் அளித்த டாக்டர் இவான் 27 வது கேள்வியிலிருந்து 32வது கேள்வி வரை க்கு அளித்துள்ள பதிலை இங்கே ஆதாரமாக வைக்கின்றோம். யார் யார் Tuticorin Diocesan Association என்ற  N.G.O வில் உறுப்பினர்கள் என்பதை டாக்டர் இவான் அம்புரோஸ் கூறுகிறார் பாருங்கள். Bishop Yvon Ambroise’s answers Q 27 to Q 32

15. தான் ஊழலே செய்யவில்லை என்று கூறும் டாக்டர் இவான் அம்புரோஸ் இது விஷயத்தில் திறந்த மனதோடு அனைத்து ஆவணங்களையும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் கல்வி இலாக்காவுக்கும் பொது மக்களுக்கும்  தெரிவிப்பாரா?

16. இவர் திவ்ய நற்கருணையை தினமும் கையில் ஏந்தும்போது தான் கூறிய பொய்களும் அநீதிகளும் மனதில் தோன்றி உறுத்துமா? இல்லை உறுத்தாதா? இதை வாசித்த பிறகாவது உறுத்துமா?

17. டாக்டர் இவான் அம்புரோஸ் நிர்வாகம் ஊழல் நிறைந்தது என்பதை அறிந்த பிறகும் அரசு ஏன் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கிறது? அரசுக்கு இவர் செய்யும் ஊழல் புரியவில்லையா? அல்லது புரியாதது போல் பாசாங்கு செய்கிறதா?

விடைகள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.