தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வரலாறு முதுகலை ஆசிரியராக பணிபுரிந்த திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியர், பாதிரியார் சேவியர் அருள் ராஜ் என்பாரின் சட்டவிரோதமான நடவடிக்கையினால் 24.08.1998 முதல் பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட அன்றே அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த திரு. ஜெயசீலன் அந்தொனிராஜ் என்பார் திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டார். அதே தேதியில் திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் 24.08.2018 முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தாளாளர் சேவியர் அருள் ராஜ் பதிவு செய்துள்ளார். பணிநீக்க ஆணையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் (ரிட் மனு 14632/98) வெற்றி நிச்சயம் கிட்டும் என்பதால் தனது பணியிடத்தில் செய்யப்பட்ட நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என உத்தரவு வேண்டி 22211/98 என்ற வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 22.09.98ல் Any Appointment will be subject to the result of the writ petition என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. Order in WMP 22211 of 1998 தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் அப்போது பணிபுரிந்த திருவாளர் சேவியர் லியோனிதாஸ் என்பவரின் மறைமுக தூண்டுதலின் பேரில் அலுவலக பணியாளர்கள் இருதடவைகள் பணிநீக்கத்திற்கான மேலொப்பத்திற்கு திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலரின் மேலொப்பம் பெற முயற்சிகள் செய்துள்ளனர். ஆனால் சட்டவிரோத பதிவு என்பதால் இருதடவைகளும் மாவட்ட கல்வி அலுவலர் கையொப்பமிடாது கோடிட்டு இரத்து செய்துள்ளார். பணிப்பதிவேட்டில் டிஸ்மிசல் சார்பான பதிவு தெளிவான க்ளீன் காப்பி Clean Copy of entries made in Service Register for Dismissal பின்னர் நீதிமன்ற ஆணையை புறக்கணித்துவிட்டு பாதிரியார் சேவியர் அருள் ராஜிடம் பேருக்கு 10 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழியை எழுதி வாங்கிக் கொண்டு ரிட் மனு 14632/98வின் இறுதி முடிவிற்கு உட்படவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். Approval and undertaking. பணிப்பதிவேட்டில் உள்ள ஒப்புதலின் க்ளீன் காப்பி Mr. Jeyaseelan Antony Raj – Conditional Approval given in Service Register அன்னாரின் நியமன ஆணையிலும் அதே நிபந்தனையை எழுதி மாவட்ட கல்வி அலுவலர் மேலோப்பமிட்டுள்ளார் Appointment order and approval. க்ளீன் காப்பி Clean copy of approval given in the Appointment order 24.08.1998லிருந்து அன்னார் எல்லா பண பலன்களையும் அரசிடமிருந்து பெற்றுவந்தார். நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட நியமன ஒப்புதலை மறைத்து அன்னாருக்கு சிறப்புநிலை கூட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் திரு. ஜெயசீலன் அந்தோனிராஜ் என்பார் 31.05.2018ல் ஓய்வு பெறும் நிலை வந்தது. சம்மந்தப்பட்ட பள்ளி இளநிலை உதவியாளர் திரு.அந்தோனி ஜெயராஜ் என்பாரும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பிரிவு ஆ4ல் பணியாற்றிய திருமதி கோகிலா என்பாரும் அப்போது பொறுப்பில் இருந்த மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி என்பாருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து ந.க.எண்.10326/ஆ3/98 நாள் 18.12.1998ல் நிபந்தனை அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஒப்புதலை மறைத்து அன்னாருக்கு ஓய்வூதிய ஆணை கொடுத்துள்ளனர். Pension Order. ஓய்வூதிய கருத்துருவில் கையெழுத்திட்டுள்ள தாளாளர் பாதிரியார் ஜோசப் ரவிபாலன் அவர்களுக்கு நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்ட மேற்படி ஒப்புதல் விவரத்தினை இளநிலை உதவியாளர் திரு அந்தோனி ஜெயராஜ் சொல்லவில்லை என்று கருதப்படுகிறது. இத்தருணத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 12.03.2018 அன்று மேற்படி ரிட் மனு 14632/98ன் தொடர் வழக்குகளான் சிவில் அப்பீல் 1868-69/2014 என்ற வழக்குகளில் ஆணை பிறப்பித்தது. திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியருக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட நாளான 24.08.1998 முதல் பணி ஓய்வு நாளான 30.06.2014 வரை ஊதியம் மற்றும் பணிக்காலம் கணக்கிட்டு 15% Back-wageம் அனைத்து ஓய்வூதிய பலன்களும் கொடுக்க வேண்டும் என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் 12.03.2018 அன்று மேற்படி ஆணையில் தெரிவித்தது. SC order dated 12.03.2018. திரு. எஸ். பீற்றர் ராஜ் ஆசிரியர் உடனடியாக அரசின் நிதிச்சுமையை நிறுத்தவும் ஏற்கனவே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்யவும் உச்ச நீதிமன்ற ஆணையை இணைத்து 17.03.2018 நாளிட்ட மனுவினை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு ஊதியம் வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படியும் அதுவரை அன்னாருக்காக அரசை ஏமாற்றி வாங்கின சம்பளம் அனைத்தையும் கருவூலத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டினார் Representation dated 17.03.2018. அதே நேரத்தில் 28.03.2018 நாளிட்ட கடிதம் மூலம் வந்திக்கத்தக்க இவான் அம்புரோஸ் 15% ஊதியம் கணக்கிட்டு ஆசிரியர் திரு பீற்றர் ராஜுக்கு அனுப்பினார். ஆனால் திட்டமிட்டபடி 31.05.2018 வரை மேற்படி ஆசிரியர் ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு ஊதியம் பெற்றுக் கொடுப்பதற்காகவும் பென்ஷன் வாங்கி கொடுப்பதற்காகவும் எனது ஓய்வூதிய கருத்துருவை அனுப்பாமல் இழுத்தடித்தார். பாதிரியார் சேவியர் அருள் ராஜ் ரூபாய் 10 மதிப்புள்ள முத்திரை தாளில் கொடுத்த உறுதிமொழிப்படி நோக்கினால் கொடுக்கப்பட்ட ஒப்புதல் இரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆசிரியர் திரு.பீற்றர் ராஜ் உடனே ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் Notice dated 07.04.2018. அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திரு எஸ் பீற்றர் ராஜ் ஆசிரியர் ரிட் மனு 11121/2018ஐ தாக்கல் செய்து, தவறான முறையில் அரசை ஏமாற்றி பொது மக்களின் பணத்தை முறைகேடு செய்து திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு பெற்றுக் கொடுத்த பணத்தை பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் ந.க.எண் 10326/அ3/98 நாள் 18.12.1998 என்ற செயல்முறைகளில் மாவட்ட கல்வி அலுவலர் திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாரின் நியமனத்திற்கு நிபந்தனை அடிப்படையில் அளித்த ஒப்புதலை இரத்து செய்ய வேண்டும் என்றும் வேண்டியுள்ளார். இவ்வழக்கு 16.05.2018 அன்று விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது WP 11121 of 2018. உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆசிரியர் திரு. எஸ்.பீற்றர் ராஜ் ரிட் மனு 11709/2018 தாக்கல் செய்து உச்ச நீதிமன்ற ஆணைப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்படவில்லை என்றும் தனக்கு நிவாரணம் வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 31.05.2018 தேதியிட்ட ஆணையில் ஆணை நகல் கிடைத்த 4 வார காலத்திற்குள் ஓய்வூதிய கருத்துருவினை மாவட்ட கல்வி அலுவலருக்கும் மாநில தலைமை கணக்காயருக்கும் அனுப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது Court order dated 31.05.2018. அதன்படி திரு எஸ். பீற்றர் ராஜ் ஆசிரியரின் பணிக்காலமும் ஊதியங்களும் முறைப்படுத்தப்பட்டு மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதற்கிடையில் திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் ரிட் மனு 16151/2018ஐ தாக்கல் செய்து தனக்கு ஓய்வூதியம் வேண்டும் என பிரார்த்தித்தார். வழக்கு 25.07.2018ல் விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இவ்வழக்கும் நிலுவையிலுள்ளது WP 16151 of 2018. அரசிடமிருந்து பெற்ற மான்யத்தை தக்க வைக்க வேண்டும் என்றும் நிர்வாகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் மறைமுகமாக நிர்வாகத்தினரால் தூண்டப்பட்டு மேற்படி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. அன்னாருக்கும் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டால் ஒரு பணியிடத்திற்கு 2 பேர் ஓய்வூதியம் பெறும் அவலமும் சட்ட விரோதமும் ஏற்படும். மேற்படி டிஸ்மிஸல் வழக்கில் தொடுக்கப்பட்ட வழக்குகளான ரிட் 14632/98, 3427/2006, 1421/2012, ரிட் அப்பீல் 223/2013 மற்றும் சீராய்வு மனு 50/2013 ஆகிய அனைத்திலும் திரு பீற்றர் ராஜ் ஆசிரியர் வெற்றி பெற்ற போதும் பிஷப் இவான் அம்புரோஸ் மீண்டும் மீண்டும் பணத்தை வாரி இறைத்து வழக்குகள் தொடர்ந்தார். பாதிரியார்கள் கேட்டதற்கு தனக்கு டில்லியில் அநேகரை தெரியும் என்றும், தான் உலகளவில் பிரசித்தி பெற்றவர் என்றும் ஆசிரியர் திரு.பீற்றர் ராஜை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்றும் கூறி வீணாக வழக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்துக் கொண்டே சென்றார். அதன் விளைவு? – நிர்வாகம் பிறப்பித்த தவறான ஆணையால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டு விரையம் செய்யப்பட்டுள்ளது. அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தவறாக ஏமாற்றி பெற்ற மான்யத்தை பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து திரும்ப பெற வேண்டும். அனைத்து வழக்குகளிலும் ஆசிரியர் வெற்றி பெற்றார். ஆனாலும் பிஷப் இவான் அம்புரோஸின் வெறி அடங்கவில்லை. இவ்வழக்கில் ஆசிரியர் வெற்றி பெற்ற பிறகு 2013ல் பரிமாரப்பட்ட சில கடிதங்களை இங்கு வாசிக்கலாம். Letter of Correspondent dated 05.06.2013, Letter of Esacki dated 24.06.2013, Letter of DEO dated 04.07.2013 திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனையின் பேரிலான ஒப்புதலை சிறிதும் பொருட்படுத்தாது நீதிமன்ற ஆணையை அவமதித்து அரசிடம் மேற்படி ஆசிரியருக்காக சட்டவிரோதமாக பெற்ற அனைத்து பணபலன்களும் சேவியர் அருள் ராஜிடமிருந்தும் பிஷப் இவான் அம்புரோஸிடமிருந்தும் வசூலித்து கருவூலத்தில் கட்டவேண்டும். அல்லது பிஷப் இவான் மற்றும் சேவியர் அருள்ராஜ் ஆகிய இருவரும் செய்த தவறுக்காகவும் சட்டவிரோதத்திற்காகவும் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்று மேற்படி பணத்தை அரசு கருவூலத்தில் திரும்ப செலுத்த வேண்டும். ஏமாற்றியவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத மைனாரிட்டி உரிமையின் பேரில் எத்தனையோ ஆசிரியர்களை பிஷப் இவான் அம்புரோஸ் கொடுமைப்படுத்தி வருகிறார். ஆசிரியர்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் வாங்கி அப்பணத்தையே ஆசிரியர்களுக்கு எதிராக செலவழிக்கும் பிஷப் இவான் அம்புரோஸ் மீதும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Category: Appeal
Appeal
சாத்தான்குளம் பள்ளிகள் கொடுத்துள்ள தகவல்கள்
சாத்தான்குளம் தூய இருதய தொடக்கப்பள்ளி மற்றும் புனித ஜோசப் பெண்கள் தொடக்கப்பள்ளி ஆகியவைகளிடம் சில தகவல்கள் வேண்டப்பட்டன. பள்ளிகளை நடத்தும் கல்வி முகமையின் பெயர், பள்ளிகளின் நிலம் சம்மந்தப்பட்ட ஆவணங்கள், பள்ளிகளின் மைனாரிட்டி உரிமை சம்மந்தப்பட்ட ஆவணங்கள், தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் தாளாளர் கண்காணிப்பாளர் விவரம் வேண்டப்பட்டது. இப்பள்ளிகள் மைனாரிட்டி பள்ளிகள் என்ற போர்வையில் செயல்படுவதால் பல ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது. மேலும் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேறொரு நிர்வாகம் வேறொரு மாவட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களை மாற்றி இப்பள்ளிகளில் பதவி உயர்வு கொடுத்து ஊழல் செய்துள்ளனர். ஆவே மரியா தொடுத்த வழக்கு எண்.8491/2009ல் வந்திக்கத் தக்க ஆயர் நீதிமன்றத்தில் கொடுத்த எதிர்வாதவுரையில் பொது முன்னுரிமை பட்டியல் பேணுவதாகவும் பதவி உயர்வு அந்த பொது முன்னுரிமை அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். பிறகு எப்படி மற்றோர் நிர்வாகத்தை சேர்ந்த மற்றோர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இவரது நிர்வகத்திற்கு பதவி உயர்வில் வரமுடியும்? ஆயர் அவர்களே இதெல்லாம் என்னங்க? அப்புறம் பள்ளிகளைப்பற்றி எந்த தகவலும் கேட்கமுடியாதாம். பொதுநலன் இல்லையாம்!!! வந்திக்கத்தக்க ஆயர் இவாம் அம்புரோஸ் எப்போதுமே சின்னப்புள்ள மாதிரிதான் பேசுவார் அவரது பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களையும் அவரைப்போலவே பதில் எழுத வைப்பார். அதாவது The Tuticorin Diocesan Association என்று பதிவு செய்துவிட்டு The Roman Catholic Diocese of Tuticorin என்ற பெயரில் செயல்படுகிறார்களாம். இப்படி தகவலறியும் மனுவிற்கு தவறான பதிலை எழுதி கொடுப்பதற்கென்றே சிலர் இருக்கின்றனர். அவர்கள் ஆசிரியர்கள் என்பதால் குறைகூற இயலவில்லை. ஏனேனில் அவர்கள் ஆயர் இவானின் சொல்படிதானே மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்.
கண்காணிப்பாளர் இசக்கி, ஒரு ஆசிரியர் இரண்டு TSR வைத்துள்ளார் அதனால்தான் அவரை Dismiss செய்தோம்னு கூறிக் கொண்டு திரிகிறார். இப்படி சொல்லிக்கொண்டு திரியும் இசக்கிக்கு ஒரு சொசைட்டியை பதிவு செய்துவிட்டு வேறொரு சொசைட்டியின் பேரில் செயல்படக்கூடாது என்றும் அது தவறு என்றும் தெரியாதாக்கும்? இப்படி சொல்றதுக்கு இவான் அம்புரோஸுக்கும் இசக்கிக்கும் வெட்கமாக இல்லையா? பாவம் தலைமை ஆசிரியர்கள்!!! தகவலறியும் மனுவிற்கு தலைமை ஆசிரியர்கள் கொடுத்துள்ள பதில்கள் கீழே.
St Joseph Primary School Sathankulam
Sacred Heart Primary School Sathankulam
ஆவே மரியாவின் RTI DESK உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஏற்கனவே இதே நிர்வாகத்தை சேர்ந்த இதே ஊரை சார்ந்த தூய இருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் சில தகவல்கள் வேண்டப்பட்டு அது தரப்படாததால் தகவல் ஆணையம் குறிப்புரை வழங்க பள்ளி நிர்கத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. மேற்படி தலைமை ஆசிரியரும் பள்ளித் தாளாளரும் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். தவறு செய்திருந்தால் மன்னித்தருளுக என்று ஆணையத்திற்கு தலைமை ஆசிரியரும் தாளாளரும் தெரிவித்துள்ளனர். அதனையும் கீழே பிரசுரித்துள்ளோம்.
Sacred Heart HSS and RTI details
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி பிஷப் இவான் அம்புடோஸால் திடுதிடுப்பென்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமூகத்தினரை திருப்தி படுத்துவதற்காக புனித தாமஸ் மெட்ரிக் பள்ளியின் வருமானத்தில் இருந்து பணம் வாங்கி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தை சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளிக்கும் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் விளையாட்டிடமாக தெரிவித்து அதனடிப்படையில் அங்கீகாரமும் நிதி உதவியும் பெற்று வருவதை மறைத்து பல குல்மால்கள் செய்து ஊழல் பேர்வழி திரு இராமேஸ்வர முருகன் அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு சில நொடிகளில் துவக்க அனுமதி பெறப்பட்டது தெரியவருகிறது. திரு இராமேஸ்வர முருகன் பற்றி அறிய கீழ்காணும் இணைப்புக்கு செல்க. https://tamil.oneindia.com/news/tamilnadu/s-kannappan-appoints-new-school-education-director-216619.html மேலும் சம்மந்தப்பட்ட நிர்வாகம் மைனாரிட்டி நிர்வாகமாக பாவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரு கோயில் ராஜ் என்பார் இது சார்பாக புகார் கொடுத்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தவறு செய்துள்ளது அப்புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் அப்பள்ளியை பார்வையிட்டதாகவும் விசாரணை மேற்கொண்டதாகவும் படம் காட்டி மனுதாரரை விசாரிக்காமலும் அவரிடம் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யாமலும் எல்லாம் சரியாக உள்ளது என்று தனது ந.க.எண்.377/அ/2017 நாள் 14.11.2017 கடிதத்தில் தெரிவித்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டிருக்கிறார். மேற்படி திரு. கோயில்ராஜ் எனபாரின் புகார் மனுவும் அன்னாரின் புகார் மனுவினை பரிசீலனை செய்ததாக கூறி அன்னாருக்கு தெரிவித்த கடித நகலும் இதோ. ஆவண ஆதாரங்களின் உதவியுடன் மனுதாரரை விசாரிக்காமல் பள்ளி துவக்க அனுமதி பெற்றதை நியாயப்படுத்தி எழுதியுள்ள விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் தனது கடமையை சரியாக செய்யாத குற்றத்திற்குள்ளாகியுள்ளார்.
திரு கோயில்ராஜ் என்பாரின் புகார் மனு Mr.Koilraj’s Complaint
விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் IMS Letter in response to Mr. Koilraj’s Complaint letter
Bishop Yvon Ambroise’s Activities have become childish
Bishop Yvon Ambroise has become a child now. His activities are becoming childish. We give an example here. In the affidavit in W.P.No.11437/2017 filed by the Tuticorin Diocesan Association to retrieve FCRA Number Father Sahaya Joseph has told several lies. You can read and understand the lies. WP.No.11437 of 2017 Affidavit The Society tells that it runs several institutions including 31 technical institutes, homes and hospitals. Thus, by telling several lies before the Hon’ble court this society has obtained an interim stay order against the central government which banned its FCRA number. Our Association has submitted impleading petition. We requested various departments to give the details of institutions which are mentioned in the affidavit. One of the requests was made before the Directorate of Technical Institutions, Chennai, to give the details of 31 technical institutions being run by Bishop Yvon’s society. Details of 31 technical institutions requested through this letter The Directorate requested the President of the Tuticorin Diocesan Association to give the details. Reply letters received from Director of Technical Institutions The Director of Technical Institutions has sent the copy of letter sent by Bishop Yvon Ambroise. In the childish letter bishop yvon says that instead of typing 1 it was typed as 31. Further, he has said that an amendment affidavit has been filed before the Hon’ble Court. Bishop Yvon’s Childish reply sent to the Director Such a huge difference in typing.
Ok. Let it be like that. The society filed Writ petition No.3061/2014. In that affidavit the total Educational Institutions was mentioned as 261. We are giving the particular page of the affidavit here. Page 3 of the affidavit filed in WP.No.3061 of 2014 It includes this 31 institutions. Is this a typing mistake? What is interesting is that this case was disposed on 03.07.2015 by considering the lies submitted by the society. Can the Bishop file amendment affidavit?
Page 1 of Court order in W.P 3061 of 2014
Page 2 of Court order in W.P 3061 of 2014
Page 3 of Court order in W.P 3061 of 2014
Page 4 of Court order in W.P 3061 of 2014
Page 5 of Court order in W.P 3061 of 2014
It is a pity that this Childish Bishop has been trapped by the advisers. Then what happened to WP.No.7587/2012 in which also he got stay order by telling these lies before the Hon’ble Court? Affidavit filed in WP.No.7587 of 2012
If the members of the society know the addresses of the institutions and the details of the agents who run the institutions as mentioned in the WP.No.11437/2017, please inform us. Because the departments concerned do not know them.
Many teachers and innocent hard-working fathers have been punished illegally by this arrogant Bishop, the best liar in the Catholic Church. But there is no punishment to this liar who involved in many criminal offenses. He is a shame to Roman Catholic Church. He has become childish and has lost memories. He also has become silly in his behaviour. Even then our Church allows him to continue as Bishop in Tuticorin, as the President of the Tuticorin Diocesan Association, as the Manager of R.C.Schools, and as Corporate Manager of R.C.Schools.
Only a few Fathers raise voice against this arrogant Bishop. But they are suppressed by this liar. The fathers should be models to raise voice against injustice. What come may!!!
We hope His Excellency the Apostolic Nuncio of India would take appropriate action against this liar Bishop immediately. We have a lot of proofs for his illegalities and criminal activities.
அண்டப்புளுகு ஆசாமி பிஷப் இவான் அம்புரோஸ் 31 தொழில் நுட்ப கல்லூரி நடத்துறாராம், 13 ஆஸ்பத்திரி நடத்துறாராம், 9 டிஸ்பென்சரி நடத்துறாராம், நர்சிங் பள்ளி நடத்துறாராம், மது அருந்துவோருக்கான மருவாழ்வு மையம் நடத்துறாராம், லெப்ரசி இல்லம் நடத்துறாராம், 11 பொது ஆர்பனேஜ் நடத்துறாராம், 10 பெண் குழந்தைகளுக்கான ஆர்பனேஜ் நடத்துறாராம், 6 ஆண் குழந்தைகளுக்கான ஆர்பனேஜ் நடத்துறாராம், 6 க்ரெச் நடத்துறாராம், 4 ஹோம் ஃபார் டெஸ்டிட்யூட் நடத்துறாராம், 4 ஊனமுற்றோருக்கான இல்லம் நடத்துறாராம், 2 முதியோர் இல்லம் நடத்துறாராம், 1 ரெஸ்க்யூ இல்லம் நடத்துறாராம், 1 பெண்கள் நல இல்லம் நடத்துறாராம், 1 மன வளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் நடத்துறாராம். என்ன தலை சுற்றுதா? இதெல்லாம் எங்க நடக்குதுன்னு பிஷப்கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளலாம். அரசு அதிகாரிகளுக்கு இவைகள் எங்கு நடக்கின்றன என்பது தெரியவில்லை.
100000 மாணவர்கள் தற்சமயம் பலன் பெறுகிறார்களாம். பள்ளிக்கூடங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து குடுக்குறாராம். அதுவும் கணக்கிடமுடியாத அளவுக்கு செய்றாராம்!!! பள்ளிக்கூடங்கள் எல்லாமே லாப நோக்கத்திற்காக நடத்தப்படவில்லையாம். இதற்கிடையில் எல்லா பள்ளிக்கூடங்களும் மைனாரிட்டி நிறுவனங்களாம். இவரு போய் வாங்கிட்டு வந்தாராம்.
300 கிராமங்களில் ஹெல்த் ப்ராஜெக்ட் பண்ணுறாராம். 2800 கக்கூஸ் கட்டி குடுத்துருக்காராம். அதுவும் தனிப்பட்ட பயனாளிகளுக்கும் பொதுப்பயன்பாட்டிற்குமாம். ஆயிரக் கணக்கில் சுய உதவி குழுக்கள் நடத்துறாராம்.
அதைவிட ஒரு படி மேலே ஏறி 450 வருஷமா சேவை செய்கிறார்களாம். அதாவது 1937ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சொசைட்டி 450 வருஷமா சேவை செய்றதாம்!!!
Only for the legal perpetuity, these organizations are registered as societies. அப்படின்னா என்னங்கோ..?
இவரு மட்டும் இவருக்கு தகுந்தாற்போல எழுதுவாராம். வாத்தியாருங்க இருமுனா தப்பாம்? இவரு செஞ்சா எதுவுமே தப்பில்லையாம். களவு எடுப்பாராம். பொய் சொல்லுவாராம். போலி ஆவணங்கள் தயார் பண்ணுவாராம். ஊருல இல்லாத அத்தனை திருட்டுத்தனத்தையும் பண்ணுவாராம். அது தப்பில்லையாம். இவருக்கு வேண்டிய ஆள் என்றால் ரூபாய் செலவழித்து தப்பு பண்ணுனவன கூட காப்பாத்துவாராம். ஆனா வேண்டாத ஆள் என்றால் தப்பு செய்யாதவனையும் பணம் செலவழித்து தண்டிப்பாராம்.
உயிரோடு இருந்த பாதிரியார் ரொசாரியோ பெர்னாண்டோவை செத்துட்டாருன்னு கோர்ட்ல பொய் சொன்ன பொய்யாங்கண்ணி. 18.05.2005லிருந்தே இவரு கார்பரேட் மேனேஜராம். வெக்கமில்லாமல் பொய் சொல்லிட்டு தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
நியாயத்த கேட்டா திருச்சபையை விட்டு விலக்குவேன் என்று பயமுறுத்துவாராம். ஏற்கனவே இவரு வந்த பிறகு தானாக திருச்சபையை விட்டு எத்தனையோ பேர் ஓடிட்டாங்கன்னு இவருக்கு தெரியாதா என்ன? ஓடுனவங்கள பிடிக்கிறத விட்டுட்டு இருக்கிறவன விரட்ட பாக்குறாரு.
பிஷப் இவானும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரும்
பிஷப் இவான் அம்புரோஸ் திடீரென தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று மாற்றிக் கொண்டார். தனது லெட்டர் பேடை மாற்றிக் கொண்டார். பள்ளிகளை நடத்துவது தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்பதாக லெட்டர் பேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இசக்கியும் பதவியை மாற்றிக் கொண்டார். பிஷப் 18.05.2005 லேயே மேனேஜர் ஆப் ஆர்.சி ஸ்கூல்ஸ் என்று நியமனம் பெற்றதாக 13.07.2016 அன்று இசக்கியிடம் ஒரு ஆர்டரை வாங்கி அதன் நகலினை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சங்க செயலர் திரு. பீட்டர் ராஜிடம் ஒப்படைத்தார். பிஷப் 28.09.2005ல் தான் தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற சொசைட்டியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் அந்த சொசைட்டிக்கு 18.05.2005லேயே எப்படி தலைவராக முடியும் என்ற கேள்வியை எழுப்பியவுடன் தானைத் தலைவர் வந்திக்கத்தக்க இவான் கீழ்கண்ட லெட்டரை ஆவே மரியா சங்கத்தின் செயலருக்கு எழுதினார். Bishop letter dated 28.12.2017 மனுஷன் உளறி கொட்டியிருக்கிறார். சாதாரணமாக பதில் தர மாட்டார். அவரு பப்ளிக் அதாரிட்டி இல்லையாம்!!! புத்திசாலி பிஷப்!!! இப்போ மட்டும் பதில் எப்படி கொடுத்தார் என்பது தெரியவில்லை. இவரு மட்டும்தான் புத்திசாலி என்ற நினைப்பு இவருக்கு.
சங்க செயலர் விடவில்லை. 2005ம் வருடம் முதல் கூட்டத்திலேயே எமது சங்கத்தை ஆவே மரியாவா? ஈவ் மரியாவா? என்று கிண்டல் அடித்த மேதாவி அல்லவா இவர். மேற்படி கடிதத்தை இணைத்து தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவலறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களை வேண்டினார். RTI Petition to DEO on the basis of Bishop letter dated 28.12.2017
மேற்படி தகவலறியும் மனுவிற்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பதில் தருவதற்கு பதிலாக அதிமேதாவி வந்திக்கத்தக்க இவானுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டு பதிலை தருமாறு மீண்டும் இந்த வந்திக்கத்தக்க இவான் அம்புரோஸ் பிஷப்புக்கே அனுப்பியுள்ளார். வேடிக்கை என்னவென்றால் மேற்படி பிஷப் இவான் தன்னை கார்பரேட் மேனேஜர் என்று சொல்லுகிறார். கல்வி முகமையை மாற்றி தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்று சொல்லுகிறார். ஆனால் மாவட்ட கல்வி அலுவலர் எனக்கு தகவல் கொடுக்கும்படி மேலாளருக்கு அனுப்பின கடிதத்தில் மேலாளர், ஆர்.சி.பள்ளிகள், தூத்துக்குடி மறைமாவட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். என்ன ஒரு கோவாப்பரேஷன் பார்த்தீர்களா? மாவட்ட கல்வி அலுவலரின் கடிதம் இதோ Letter of Thoothukudi DEO in reply to RTI petition
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் வழக்கமாக தகவலறியும் மனுவிற்கு பதில் எழுத மாவட்ட கல்வி அலுவலர் பிஷப் இவானுக்கு எழுதுவார். உடனே பிஷப் தகவலறியும் மனுவிற்கு தான் பப்ளிக் அதாரிட்டி இல்லாததால் பதில் தரவேண்டியதில்லை என்று பதில் கொடுப்பார். மாவட்ட கல்வி அலுவலர் புத்திசாலித்தனமாக அதையே தகவலறியும் மனுவிற்குப் பதில் என்று மனுதாரருக்கு அனுப்பிவிடுவார். இது கல்வித்துறையும் பிஷப்பும் நடத்தும் நாடகம். பிஷப் எழுதிய ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுகிறது. Bishop syas he is not a public authority ஆனால் வேற வழியில்லாமல் சங்க செயலருக்கு பத்தி 1ல் காணும் 28.12.2017 நாளிட்ட கடிதம் மூலம் தகவல் தந்துள்ளார். அதுவும் தவறான தகவல்கள். மாவட்ட கல்வி அலுவலகம் என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதன்மை கல்வி அலுவலர்களையும் மாவட்ட கல்வி அலுவலர்களையும் மேதாவி பிஷப் இவான் அம்புரோஸ் உடனே விலைக்கு வாங்கிவிடுகிறார். அல்லது கீழ்காணும் கடிதத்தின் மூலம் இவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மேலதிகாரி ஆணையிட்ட பிறகும் முதன்மை கல்வி அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா? இப்படி நிறைய ஆதாரங்கள் எமது சங்கத்தில் உள்ளன.
இசக்கி தனது பதவியை மாற்றியுள்ளமைக்கு ஆதாரம் இதோ. Esacki’s letter as a proof that he has changed the eduactional agency and his post
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் விவரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஊழல் இல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு மெத்தப்படித்த மேதாவி பிஷப் இவான் அம்புஎரோஸுக்கும், தனது பெயரையே மாற்றிக் கொண்டு கண்காணிப்பாளராக செயல்படும் கிரிமினல் இசக்கிக்கும், வாலசைக்கும் அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வேண்டாம் என்று பொதுமக்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் சீல் கண்ட இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு ஜீப்பில் ஜாலியாக ஊர் சுற்றும் சிலர்தான் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் உள்ளனர். இது அலுவலக ஊழலுக்கு வழிவகுக்கிறது. எடுத்துக் காட்டாக திரு நரசிம்மன், திருமதி செந்தூர்கனி மற்றும் திருமதி கிறிஸ்டி போன்றோரை கூறலாம். இவர்கள் எல்லாம் பிஷப் இவானுக்கும் இசக்கிக்கும் கையாட்கள். கையெழுத்து போட மட்டுமா சம்பளம். கோப்புகளை வாசித்து விதிகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவெடுக்கவேண்டாமா?
கும்புடு போட்டுட்டு குடுக்கிற பேப்பர வாங்கிட்டு நீட்டுற இடத்துல கையெழுத்து போடுறதுக்கா அரசு இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது?
பொத்தக்காலன்விளை பள்ளி நிர்வாக அவலம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பொத்தக்காலன்விளையில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி நிர்வாகத்தின் விதிகளின்படி பள்ளித் தாளாளரை நியமிக்கவோ நீக்கவோ மாற்றவோ அதிகாரம் உள்ளவர் மேலாளர் மட்டுமே. இது 01.05.1961லும் 01.05.1989லும் உறுதி செய்யப்பட்டுள்ளது. WP.No.570/75ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள WMP.No.138/2011ல் பிஷப் இவான் அம்புரோஸ் இதை உறுதி செய்துள்ளார். இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் முதல் பிரதிவாதி ஆவார்.
இந்நிலையில் மேலாளரின் நியமன ஆணையின் பேரில் 02.06.2014 முதல் தாளாளராக பணியாற்றிய சங்.ஜோசப் ரவிபாலன் என்பாரை சங்.டொமினிக் (உண்மையான பெயர் இசக்கி, த/பெ. முத்து) என்பார் CC/2017-18/35 நாள் 04.10.2017 என்ற கடிதத்தில் தான்தான் 04.10.2017 முதல் மேற்படி பள்ளியின் தாளாளர் எனவும் சங்.ஜோசப் ரவிபாலன் தாளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் எனவும் தெரிவித்து ஒரு Self Appointment order-ஐ போலியாக தானே தயாரித்து 4 இடத்தில் கையெழுத்திட்டு அந்த போலி ஆவணத்தை தனக்கு அளிக்கப்பட்ட நியமன ஆணை என தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலருக்கும் தலைமை ஆசிரியைக்கும் அனுப்பி 2 மாதங்களுக்கு மேல் அப்பள்ளியின் தாளாளராக செயல்பட்டுள்ளார். க்ளிக் செய்க. Pothakalanvilai
02.06.2014 தேதியிட்டு பாதிரியார் ஜோசப் ரவி பாலன் அவர்களுக்கு நியமன ஆணை கொடுத்திருக்கும் அலுவலகம் Office of the Superintendent of R.C.Schools, Diocese of Tuticorin. ஆனால் 04.10.2017ல் அவரது பதவியை பறித்தது The Tuticorin Diocesean Association (Reg.No.S1/37-38). மேலாளரின் அனுமதியுடன் பிறப்பித்த ஆணை இல்லை. மேலும் பாதிரியார் டொமினிக் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து மேலாளருக்கு தெரியாமல் இந்த ஆணையை பிறப்பித்துள்ளார். அவரே அவரை தாளாளராக நியமித்து அவரே அவரது கையெழுத்தை அட்டெஸ்ட் செய்துள்ளார். ஒரு நிறுவனத்தில் இருந்து கொடுத்த நியமனத்தை வேறு ஒரு நிறுவனதிலிருந்து இசக்கி என்பார் வேறு பெயரில் ரத்து செய்து அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என்னடா உலகம். இதுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார். பாதிரியார் டொமினிக் அருள் வளன் என்பாரை பாதிரியார் டொமினிக் (இசக்கி) நியமனம் செய்து பாதிரியார் டொமினிக் அருள் வளனின் ஸ்பெசிமன் சிக்னேச்சரை பாதிரியார் டொமினிக் அட்டெஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்துக்கொண்டு இருக்கும் பிஷப் இவானை என்ன சொல்வது. இதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கிறிஸ்டி அவர்களை என்ன சொல்வது. கருவூல அலுவலர்களை என்ன சொல்வது? இதோ பாருங்கள் அந்த மானங்கெட்ட ஆர்டரை. Appointment order and approval
மேற்படி பள்ளி நிர்வாக விதிகளின்படி பள்ளித் தாளாளரை நியமிப்பதற்கோ, நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ அதிகாரம் உள்ளவர் மேலாளர் மட்டுமே என்பதை நன்கு அறிந்திருந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் போலி ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள சங்.டொமினிக் என்பாரிடமே அக்டோபர் 2017 மற்றும் நவம்பர் 2017 ஆகிய மாதங்களுக்கான மான்ய பட்டியலில் (ஊதிய கோரிக்கை) கையெழுத்து வாங்கி மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளார். மாவட்ட கல்வி அலுவலரும் அப்படியே அதை ஏற்றுக் கொண்டு சம்பள பில்லில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.
சங்.டொமினிக் என்பார் தனக்கு தானே பிறப்பித்துக் கொண்ட தாளாளருக்கான நியமன ஆணை போலியானதாகும். இப்போலி ஆவணத்தின் அடிப்படையில் அன்னார் மேற்படி பள்ளிக்காக கையெழுத்திட்டு அனுப்பிய அத்தனை கருத்துருக்களும் சம்பள பில்களும் செல்லத்தக்கதல்ல.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா?
தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற NGO தூத்துக்குடி மாவட்டத்தில் 19 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை நடத்துவத்துவதாக கூறியுள்ளது. இந்த NGOவின் தலைவர் பிஷப் இவான் அம்புரோஸ் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று திடீரென்று மாற்றிக் கொண்டார். கல்வித்துறையின் அனுமதி பெறப்படவில்லை. இவர்மீதும் கல்வி முகமை மீதும் புகார் அனுப்பப்பட்டது. புகாரை பரிசீலனை செய்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர், தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலரை இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி கடைசியில் அது குப்பைத் தொட்டிக்கு போகுமா என்பது தெரியாது. புகார் மனு இதோ
Complaint against Bishop Yvon Ambroise and the Tuticorin Diocesan Association
இணை இயக்குநரின் கடிதம் இதோ
முதன்மை கல்வி அலுவலர் திருமதி அனிதா அவர்கள் தனிக்கவனம் செலுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம். மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு நரசிம்மன் மற்றும் திருமதி செந்தூர்கனி ஆகியோர் போல இசக்கியிடமும் பிஷப் இவானிடமும் ஏமாற மாட்டார் என்று எமது சங்கம் நம்புகிறது.
திருமதி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்
திருமதி செந்தூர்கனி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுரு பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் செயல்பட்ட திரு நரசிம்மன் அவர்கள் ஊழல்கள் செய்ததால் அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திருமதி செந்தூர்கனி அவர்களை அன்னாருடைய இடத்தில் அரசு நியமித்தது. ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அடியோடு புதைத்து விட்டார் இவர். அடிப்படையில் இவருக்கு அனுபவமும் ஆற்றலும் கிடையாது. மாவட்ட கல்வி அலுவலராக செயலாற்ற எந்த தகுதியும் இவருக்கு கிடையாது. இப்படிப்பட்ட ஆள்தான் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தேவை போலும். கையெழுத்து மட்டுமே போட்டுக் கொண்டிருந்தார். தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அடிமை ஆனார். குறிப்பாக தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் மற்றும் இசக்கி ஆகியவர்களின் அடிமையாக செயல்பட்டார். இவர்களின் நிர்வாகம் ஊழல் மட்டுமே நிறைந்தது. இவர்கள் நடத்தும் 19 பள்ளிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்டது. இப்பள்ளிகள் மைனாரிட்டி பள்ளிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து தங்களை மைனாரிட்டி பள்ளிகள் என்று கூறிக்கொண்டு ஊழல் இராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் ரிட் மனு 11252/2016ல் 28.06.2016 அன்று பிறப்பித்த ஆணையில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகையில் பிஷப் இவான் அம்புடோஸின் நிர்வாகத்தில் செய்ல்படும் 19 பள்ளிகளை ஆய்வு செய்து இப்பள்ளிகளில் நிலம், விளையாட்டிடம் மற்றும் மைனாரிட்டி உரிமைக்கான ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்து உரிய சட்டப்படியான ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. Court order in WP 11252 of 2016 dated 28.06.2016 உடனே மாறுவேடத்தில் செயல்படும் இசக்கி என்ற இவானின் எடுபிடி நேரடியாகவும் நெருக்கமானவர்கள் மூலமாகவும் திருமதி செந்தூர்கனி அவர்களை சரிக்கட்டி அலுவலகத்தில் பணிபுரியிம் சம்மந்தப்பட்ட உதவியாளர்களை உரிய முறையில் கவனித்து எடுத்துக் கூறி பள்ளிகளில் எல்லா ஆவணங்களும் சரியாகத்தான் உள்ளது என்று 31.01.2017ல் ஆர்டர் போடவைத்தார் Na.Ka.No.3930 -B4-2016 dated 31.01.2017. பள்ளிகளை 23.11.2016 முதல் 28.12.2016 முடிய உள்ள நாட்களில் பார்வையிட்டதாக அப்பட்டமான பொய்யையும் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி எழுதினார். அந்த அளவுக்கு அவர் கனமாக கவனிக்கப்பட்டிருக்கிறார். மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். உடனே நீதி வழுவாத இந்த மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி மனுதாரரையும் சம்மந்தப்பட்டவர்களையும் விசாரணை செய்ததுபோல பாசாங்கு செய்து படம் காண்பித்து 24.02.2017 நாளிட்ட கடிதத்தை எழுதி இசக்கியின் நிர்வாகத்திற்கு சாதகமான ஆர்டர் பிறப்பித்து தப்பித்து விட்டார். Na.Ka.No.3930 -B4-2016 dated 24.02.2017
19 பள்ளிகளையும் நேரில் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் நேரில் ஆய்வு செய்யவில்லை.
The Tuticorin Diocesan Association மற்றும் The Roman Catholic Diocese of Tuticorin இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறு என்ற உண்மை தெரியாமல் உளறிக் கொட்டியிருக்கிறார்.
ரிட் மனு 570/75ஐ மேற்கண்ட இரண்டு NGO-க்களும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் The Roman Catholic Diocese of Tuticorin என்ற NGO தாக்கல் செய்ததாகவும் அது மைனாரிட்டி உரிமை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
R.C.No.24541/G3/76 dated 20.11.1976 என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக மைனாரிட்டி உரிமை அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இணை இயக்குநர் இப்படி ஒரு செயல்முறைகள் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார். ஆனால் திருமதி செந்தூர்கனி அவர்களோ இச்செயல்முறைகளின்படி மைனாரிட்டி உரிமை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எப்பள்ளிக்கும் முறையான நில ஆவணம் கிடையாது. இவர் இருக்கிறது என்கிறார். இப்படி பல உளறல்கள். கொடுமை என்னவென்றால் இவை எல்லாம் பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தெரியும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரியும். அவர்கள் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்?
இப்போ விஷயம் சீரியஸ் ஆகி விட்டது. மனுதாரர் பிரச்னையை விருகிறார்போல இல்லை. மறுபடியும் ரிட் மனு 6851/2017ஐ தாக்கல் செய்து மேற்படி மாவட்ட கல்வி அலுவலரின் ஆணை தவறானது எனக் கூறி நிவாரணம் வேண்டியுள்ளார். உடனே, மேற்படி விஷயத்தில் உதவி செய்த மாவட்டக் கல்வி அலுவலரின் நிலமையை யோசிக்காமல், பிஷப் இவானும் கண்காணிப்பாளர் இசக்கியும் தங்களது நிர்வாகத்தின் பெயரை மாற்றி மேற்படி பள்ளிகளை The Tuticorin Diocesan Association என்ற நிறுவனம்தான் நடத்துகிறது என்று கூறியுள்ளார்கள். மேலும் இவான் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று மாற்றிக்கொண்டார். இவானுக்கு 75 வயதுக்கு மேல் ஆகிறது. ரிட்டைர்டு ஆகிவிட்டார். ஞாபக மறதி அதிமாகிவிட்டதால் முன்னுக்குப் பின் முரணான கையெழுத்துக்களை போட்டு வருகிறார். வேடிக்கையான மனிதராகிவிட்டார். இசக்கிக்கு இது நன்றாகத் தெரியும். இவானின் தற்போதய நிலமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பணவிஷயத்திலும் வேறு பல விஷயங்களிலும் சக்கை போடு போடுகிறார். தங்களது நிர்வாகத்தின் பெயரையே (Educational Agency) மாற்றியுள்ளார்கள் என்றால் பாருங்களேன். இதற்கு ஆதாரங்களை கீழே காணலாம். மேலும் பிஷப் இவானும் இசக்கியும் நிர்வாக மாற்றத்தையோ அல்லது தங்களது பதவி மாற்றத்தையோ கல்வித்துறையின் அனுமதியுடன் செய்யவில்லை. அவர்களாகவே முடிவெடுத்து அவர்களாகவே மாற்றியுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ அல்லது மாவட்ட கல்வி அலுவலரோ அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பணத்தை விரயமாக்குகிறார்கள்.
இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் இசக்கிதான். இசக்கி எந்த வேலைக்கு லாயக்குன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் பிஷப் இவான் இசக்கிகிட்ட முக்கியமான பொறுப்பை கொடுத்து பள்ளி நிர்வாகத்தையே சீரழித்துவிட்டார் என்று பலரும் பேசுகிறார்கள்.
சீராய்வு மனு 139/2007ல் மனுதாரார் The Roman Catholic Diocese of Tuticorin. இப்படி ஒரு பதிவு பெற்ற சங்கம் இல்லாத போதே பிஷப் இவான் அம்புரோஸின் தூண்டுதலின் பேரில் கற்பனையான பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் ஏமாற்றப்பட்டுள்ளது. Review Petition No.139 of 2007 decided by full bench on 12.11.2007
ரிட் மனுக்கள் 7587/2012 மற்றும் 11437/2017ல் மனுதாரர் The Tuticorin Diocesan Association. பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் இவைகளில் மனுதாரர்கள். இவர்கள் மேற்கண்ட 19 பள்ளிகள் உட்பட 261 பள்ளிகளை இந்த சொசைட்டி நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதை புரியாத மாவட்ட கல்வி அலுவலர் The Roman Catholic Diocese of Tuticorin தான் பள்ளிகளை நடத்துகிறது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இசக்கி கொடுத்துள்ள மைனாரிட்டி விளம்புகை சான்றில் ரோமன் கத்தோலிக் டய்சிஸ் ஆஃப் தூத்துக்குடி தான் பள்ளியை நடத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு NGO-க்களும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டவை. அவைகளின் பதிவுச் சான்றுகளை கீழே உள்ள இணைப்புகளை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
Registration Certificate of the Tuticorin Diocesan Association S1 of 37-38 dated 14.04.1937
Registration Certificate of Roman Catholic Diocese of Tuticorin Reg.No.48/2016 dated 04.07.2016
தெளிவான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும் நிர்வாகம் செய்த/செய்யும் சட்டவிரோதங்களுக்கு உறுதுணையாக இருந்த கல்வி அதிகாரி திருமதி செந்தூர்கனி மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவருக்கு கொடுத்த சம்பளத்தை திரும்ப பெறவேண்டும். தவறாக பிறப்பித்த ஆணைகள் மூலம் செய்த சட்டவிரோதங்களை களையும் வரை ஓய்வூதிய பலன்கள் கொடுக்காதிருந்தால் மற்ற அதிகாரிகள் தங்கள் பணியை கவனமாக செய்வார்கள்.
நூற்றுக் கணக்கான ஆவணங்களும் ஆதாரங்களும் ஆவே மரியாவிடம் உள்ளன. அனைத்தையும் பிரசுரிக்க முடியாததால் ஒரு சில ஆவணங்களை மட்டும் பிரசுரித்துள்ளோம். தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.
80 லட்சம் ரூபாய்
பிஷப் இவான் அம்புரோஸ் 04.06.2016ல் ஒரு கடிதம் தயார் செய்து பாதிரியார் ரூபர்ட்டுக்கு கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் 14.10.2015 அன்று தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற சொசைட்டியின் Governing Body Meeting நடந்ததாகவும் அதில் டயோசிசன் டெப்பாசிட்டை pledge செய்து 80 லட்ச ரூபாயை வங்கியில் கடனாக பெற்று சாத்தான்குளத்தில் மேரி இம்மாகுலேட் பள்ளி ஆரம்பிப்பதற்கு கொடுப்பதாகவும் ஒரு சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றை இங்கு பிரசுரிக்கிறோம். பிஷப் இவானின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது உண்மைதானா என்பதை பாதிரியார்கள் சரிபார்க்கவும். ஏனெனில் மேரி இம்மாகுலேட் பள்ளிக்கான செலவுகளை புனித தோமையார் மெட்ரிக் பள்ளிதான் கொடுக்கிறது என்பதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள். பிரித்தாளும் கொள்கையை கையாளும் வந்திக்கத்தக்க பிஷப் இவான் அம்புரோஸ் இதிலும் ஏதாவது ஏடாகுடம் பண்ணியிருப்பார் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
நீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்
பிஷப் இவான் அம்புரோஸ் பண விசயத்தில் பல ஊழல்கள் செய்துள்ளார். மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை மறைப்பதற்காக பல நாடகங்கள் ஆடுகிறார். அவரது ரகசியங்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்டத்தில் இருக்கிறார். தனக்கு வேண்டியவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு ரகசியமாக நிர்வாகம் செய்கிறார். அடுத்த பிஷப் வந்தால் இவரது ஊழல்கள் வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்து பதவியில் தொடர்கிறார். அடுத்த பிஷப் வருவதற்குள் இந்த பிரச்னையை முடித்துவிட்டால் தனது வண்டவாளங்களை மூடி மறைத்துவிடலாம் என்று திட்டமிட்டு தனக்கு பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார்.
பாதிரியார் சகாய ஜோசப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அப்பிடவிட் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பொய்களை எவ்வாறு சரமாரியாக சொல்லியிருக்கிறார் என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மற்றுமொரு அப்பிடவிட் பாதிரியார் ஜெபநாதன் அவர்கள் சமர்ப்பித்ததாகும். அதிலும் பொய்கள்தான் மிஞ்சி நிற்கின்றன. கீழ்கண்ட இணைப்பில் அதை வாசிக்கலாம்.
Affidavit filed in WP.No.7587 of 2012
மொத்தத்தில் பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் உண்மைக்கு புறம்பான விவரங்களை நீதிமன்றம் என்று கூட பாராமல் தங்களது அப்பிடவிட்டில் அள்ளி வீசியிருக்கிறார்கள். இவ்வாறு பொய்களை கூசாமல் எழுதச் சொல்லியிருப்பது பிரபல பிஷப் இவான் அம்புரோஸ் அவர்கள்தான். தல இல்லாமல் வால் ஆடுமா?
ஆசிரியர்கள் பணத்தில் உல்லாச வாழ்வு நடத்தும் இந்த இவான் தவறு செய்யாத ஆசிரியர்களைக் கூட தண்டிக்கிற ஒரு கொடூரன். இந்த ஆளுக்கு தான் ஒரு பெரிய புனிதர் என்று நினைப்பு. இவரு சொல்லும் பொய்களுக்கும் செய்யும் சட்டவிரோதங்களுக்கும் இவருக்கு மேமோ கொடுத்து சஸ்பெண்ட் செய்வது யார்? இவர் நீதிநிலை தவறுபவர் என்று தெரிந்தும் சில கால்வருடிகளும் பதவி ஆசை பிடித்தவர்களும் இந்த கொடூரனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்த கொடூரனுக்கு பொன்விழா எடுக்க ஐஸ் வியாபாரி மாதிரி ஊர் ஊராக ஒரு கூட்டம் வேல மெனக்கட்டு அலயுது. கேவலம். தூத்துக்குடி மறைமாவட்டத்தை கெடுத்த இந்த நயவஞ்கனுக்கு பொன்விழா ரொம்ப முக்கியமாம். விரட்டி அடிப்பதற்குப் பதிலாக விழா எடுக்கிறார்களாம் விழா.